தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூமிகா – அனுஷ்கா மோதலா? பரபரக்கும் திரையுலகம்!!

Go down

பூமிகா – அனுஷ்கா மோதலா? பரபரக்கும் திரையுலகம்!! Empty பூமிகா – அனுஷ்கா மோதலா? பரபரக்கும் திரையுலகம்!!

Post  ishwarya Wed Apr 10, 2013 12:58 pm

நடிகைகள் பூமிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கில் “தகிட தகிட” என்ற பெயரில் வெளியான படம், தமிழில் துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விசில் போட சொன்ன ராஜா ஹீரோவாக நடிக்க, ஹரிப்பிரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக பூமிகாவுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டதாகக் தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

இதுபற்றி இயக்குனர் ஸ்ரீஹரி நானு கூறுகையில், இது இளைஞர்களை பற்றிய படம். படத்தில் பூமிகா, ஹரிப்ரியா தவிர 50 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதனால் கமர்சியல் வேல்யூவுக்காக தயாரிப்பாளர் பூமிகா, அனுஷ்காவை ஒரு பாட்டுக்கு ஆட அழைத்தார். அவர் மறுத்தது உண்மை. ‘ஒரு பாட்டுக்கு ஆடினால் தொடர்ந்து நண்பர்கள் பலரும் அழைப்பார்கள். அதை தவிர்க்க முடியாது. வேண்டுமானால் கவுரவ வேடத்தில் நடித்து தருகிறேன்’ என்றார். பிறகு அவர் ஆடும் திட்டத்தை கைவிட்டோம்.

கல்லூரி மாணவர்கள் சிலர் அனுஷ்காவின் பேஸ்புக் நண்பர்களாக இருப்பது போலவும், விடுமுறை நாளில் அனுஷ்கா அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பது போலவும் காட்சிகளை அமைத்தோம். இது அனுஷ்காவுக்கு பிடித்துப்போனதால் நடித்துக் கொடுத்தார். இதனால் பூமிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் எந்த மனவருத்தமும் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum