போராளிக்காக ஒரு குதிரை சவாரியும்…..ஓயாத முதுகு வலியும்
Page 1 of 1

போராளி படத்தின் எல்லா வேலைகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. பொதுவாக சசிகுமார் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் ஆபிஸ் வாசலிலேயே துண்டை விரித்து தூங்கிக் கொண்டிருப்பார்கள் விநியோகஸ்தர்கள். படத்தை வேறு யாராவது தட்டிக் கொண்டு போய்விட்டால் என்னாவது என்ற அச்சத்தின் காரணமாகதான்! ஆனால் நடுவில் வந்து பெயரை கெடுத்தது ஈசன்.
படமே முடிந்து சசிகுமாரின் இரட்டை குதிரை சவாரி ஸ்டில்கள் எல்லாம் எல்லா பத்திரிகை களிலும் விளம்பரமாக வந்துவிட்டது. இப்போது சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்த விநியோகஸ்தர்கள், தம்பி ரேட் என்ன சொல்லுங்க என்று பேச ஆரம்பிக்கிறார்களாம்.
ஆனால் இந்த முறை வெற்றியை எகிடு தகிடாக அள்ளாமல் விடப் போவதில்லை என்ற வெறியோடுதான் களம் இறங்கியிருக்கிறார் சசிகுமார். அதற்கு உதாரணமாக படத்தில் ஐம்பதே வினாடிகள் இடம் பெறப் போகும் இந்த குதிரை சவாரி விஷயத்தையே கூட எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஒரு காட்சிக்காக சசிக்குமார் செலவு செய்தது ஆறு நாட்கள். முதல் நாள் குதிரைகளை சீராக ஓடவிட்டார்களாம். அடுத்த இரண்டு நாட்கள் குதிரைப் பயிற்சியாளர்கள் அதன் மீது ஏறி ஓட்டினார்கள். நான்காம் சசிகுமார் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். ஐந்தாவது நாளில் இந்த காட்சியை முடித்துவிடலாம் என்று நினைத்தால் குதிரை ஒத்துழைக்கவில்லை.
காரணம், சசிக்குமார் பயிற்சி எடுக்கும் போது சாதாரண உடையணிந்திருந்தாராம். டேக்குக்கு போகும் போது ராஜா உடை அணிந்துவிட்டதால் குதிரைக்கு அடையாளம் தெரியாமல் ஒரே பிரச்சனை. உடனே ராஜா உடைக்கு மாறி ஐந்தாம் நாளும் எடுத்துக் கொண்டு பயிற்சி நடந்ததாம். ஆறாம் நாள்தான் நினைத்ததை எடுத்து முடித்தார்கள். அடுத்த மூன்று நாட்கள் கடுமையான முதுகு வலியின் காரணமாக மருத்துவமனையில் ஓய்வெடுத்தாராம் சசி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போராளிக்காக 2 ஆண்டுகள் முடி வளர்த்தேன் : சசிகுமார்
» ஸ்ரேயாவின் வாளும் வலியும்
» மாதவிலக்கின் போது ஏற்படும் வலியும், நிவாரணமும்
» உடலுறவின்போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்?
» இதுதான் அழகர்சாமியின் குதிரை கதை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum