தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டுவிட்டர், பேஸ் புக்கில் என் பெயரில் மோசடி; நயன்தாரா புகார்

Go down

டுவிட்டர், பேஸ் புக்கில் என் பெயரில் மோசடி; நயன்தாரா புகார் Empty டுவிட்டர், பேஸ் புக்கில் என் பெயரில் மோசடி; நயன்தாரா புகார்

Post  ishwarya Wed Apr 10, 2013 11:52 am

இன்டர்நெட், டுவிட்டர் பேஸ் புக்கில் நடிகர், நடிகைகள் பெயரில் மோசடிகள் நடக்கின்றன. அவர்கள் பெயரை பதிவு செய்து ரசிகர், ரசிகைகளுடன் மர்ம ஆசாமிகள் தொடர்பு வைத்து பேசுகிறார்கள். திரிஷா, ஸ்ரேயா, போன்றோர் பெயரில் நிறைய மோசடிகள் நடந்தன.இப்போது நயன்தாரா பெயரையும் சேர்த்துள்ளனர்.

அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துகள் அனுப்புகின்றனர். இதுபற்றி நயன்தாரா கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் டுவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி நடக்கிறது. அதில் எனது படங்களையும் என்னைப்பற்றிய செய்திகளையும் போட்டு வைத்துள்ளனர். அது போலி என தெரியாமல் நிறைய பேர் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum