தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜல் அகர்வால் பெயரில் பேஸ்புக் மோசடி!

Go down

காஜல் அகர்வால் பெயரில் பேஸ்புக் மோசடி! Empty காஜல் அகர்வால் பெயரில் பேஸ்புக் மோசடி!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:01 pm

பேஸ்புக், ட்விட்டரில் காஜல் அகர்வால் பெயரில் மோசடி நடந்துள்ளது.
நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் என
திரையுலகைச் சேர்ந்த பலரும் இன்டர்நெட்டில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக
வளைத் தளங்கள் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதோடு, தங்களது புதிய படங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு ரசிகர்களை
குஷிபடுத்தி வருகிறார்கள். இதனை சில சமூக விரோத கும்பல் மோசடியாகவும்
பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடிகர், நடிகைகள் பெயரில் போலி அக்கவுண்ட் துவங்கி ரசிகர்களுடன் அவர்கள்
பேசுவது போல் தொடர்பு வைத்துள்ளார்கள். இதன் மூலம் பல நடிகர், நடிகைகள்
பாதிப்பட்டிருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் நடிகை காஜல் அகர்வாலும்
இணைந்துள்ளார். ட்விட்டரில் காஜல்அகர்வால் படங்களை போட்டு, ரசிகர்களுடன்
காஜல்அகர்வால் பேசுவது போல் மோசடி கும்பல் பேசி வருகின்றனர். நிஜத்தில்
காஜல் அகர்வால்தான் என நம்பிய பல பிரபலங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ட்விட்டர், பேஸ்புக்
போன்ற சமூக வளைத்தளங்களில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக
பயன்படுத்தி மோசடி நடிக்கிறது. மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுப்பேன். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம், என்று
கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum