தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயக்கம் என்ன – திரை விமர்சனம்

Go down

மயக்கம் என்ன – திரை விமர்சனம் Empty மயக்கம் என்ன – திரை விமர்சனம்

Post  ishwarya Wed Apr 10, 2013 11:45 am

இயக்குநர் விக்ரமன் படங்களில் எல்லாமே ஒரு பேஸிக்கான கதை இருக்கும். கதைப்படி ஹீரோ எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் கடைசியில் மிகப்பெரிய ஆளாகி தனக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லுவான். அந்த பேட்டர்ன்லயே மயக்கம் என்ன படத்தை உருவாக்கியிருக்கிறார் செல்வராகவன். படத்தைப் பார்த்துட்டு வெளியே வரப்போ, இது விக்ரமன் படமா, செல்வராகவன் படமான்னு ஒரு பெரிய சந்தேகம் நம்ம மனசுக்குள்ள வருது.

பெரிய போட்டோகிராபர் ஆகணும்னு கனவுகளையும் லட்சியத்தையும் தனக்குள்ள வெச்சிட்டு அதற்காக உழைச்சிட்டிருக்கிறார் கார்த்திக் (தனுஷ்). ரொம்பவே புகழ் பெற்ற போட்டோகிராபர்கிட்ட தன்னை அஸிஸ்டென்டாக சேர்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். ஆனால் அவரோ அதற்கு மறுத்துவிடுகிறார். வயிற்றுப் பிழைப்புக்காக கல்யாண வீட்டிலையும் வேற மற்ற நிகழ்ச்சிகளிலும் போட்டோ பிடிச்சி காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கிறாரு கார்த்திக். அப்போ கார்த்திக்கோட நண்பன் சுந்தர், யாமினி (ரிச்சா)யைக் கூட்டிட்டு வந்து நண்பர்கிட்ட ‘இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு… ரெண்டு பேரும் டேட்டிங் பண்றோம்…’ என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைக்கிறாரு. அந்த நேரத்தில முட்டி மோதிக்கிறாங்க கார்த்தியும் யாமினியும். அதற்கு பிறகு படிப்படியாக கார்த்திக்கிட்ட தன் மனசை இழக்கிறாள் யாமினி. தன் நண்பன் லவ் பண்ற பொண்ணாச்சே… அப்படின்னு ரொம்பவே யோசிக்கிறான் கார்த்திக். கடைசியில இரண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. இதற்கு மேலயும் வெயிட் பண்ண வேணாம்னு நினைக்கிற சுந்தரோட அப்பா கார்த்திக்கும் யாமினிக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறாரு. லைப் நல்லாவே போய்க்கிட்டிருக்கிற போது கார்த்திக் யாருகிட்ட அஸிஸ்டென்டா சேரணும்னு நெனச்சானோ அந்த போட்டோகிராபர், கார்த்திக் எடுத்த போட்டோவை தான் எடுத்த போட்டோ என்று சொல்லி அந்த படத்திற்கு விருது வாங்கி விடுகிறார். இதைப் பார்த்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழும் கார்த்திக் தலையில் பயங்கர அடிபட்டு பைத்தியமாகிவிடுகிறான். அதன் பிறகு பைத்தியம் தெளிந்ததா, அவன் லட்சியக்கனவான போட்டோகிராபியில் ஜெயிச்சானாங்கிறதை பார்க்கிற நமக்கு மயக்கமே வருகிற அளவுக்கு சொல்லியிருக்கிறார் விக்ரமன்… சாரி… செல்வராகன்.

படம் துவங்கியது முதலே தனுஷ் வருகிற ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. முக்கியமாக அந்த ‘ஓட ஓட’ பாடல்… அதில் வரும் அனிமேஷன் எல்லாம் சேர்ந்து செம கலக்கலாக இருக்கிறது. சுந்தர் ரிச்சாவை அறிமுகப்படுத்தி வைக்க அந்த நேரத்தில் தனுஷ் அவளை ‘முண்ட கலப்பை’ என்று திட்டுவதும் மீண்டும் அதே வார்த்தையை உச்சரிப்பதும், ஒரு கட்டத்தில் ‘அவங்க அம்மா’ என்கிற ரீதியில் டாப்பிக் போக, இந்த டயலாக் எல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. அந்த போட்டோகிராபர் நாய் மாதிரி வேலை பாரு இல்ல இடத்தைக் காலி பண்ணுன்னு சொல்லும் போது, ‘பிடிச்சி அவனை கட்டிச்சி வைடா…’ என்கிற கமென்ட் பறக்கிறது ரசிகர்களிடம் இருந்து. தனுஷ் எடுத்த படங்களை எல்லாம் அந்த போட்டோகிராபர் ‘ஆய்’ என்று சொல்ல அதை தனுஷ் பீல் பண்ணுகிற காட்சி, கீழே விழுந்ததில் அபார்ஷன் ஆகிவிட வீட்டிற்கு வந்து தரையில் படிந்த ரத்தத்தை ரிச்சா கழுவி விடும காட்சியெல்லாம் செம டச்சிங்கான சீன்ஸ். தன் நண்பன் காதலி தன்னை லவ் பண்ணுகிறாளே என்பதை அறிந்து அவளிடம் அது பற்றி பேசும் போது ‘யு ஆர் லைக் மை ஸிஸ்டர்’ என்று சொல்லுவதும் அதற்கு ரிச்சா அவன் கன்னத்தில் பளார் என்று அறைவதும் செம களேபரமான காட்சிகள்.

இடைவேளை வரைக்கும் இன்ட்ரஸ்டிகான காட்சிகளை வைத்து நல்லவே படத்தை நகர்த்துறார் செல்வராகவன். தனுஷ் பைத்தியமாகிவிட்ட பின்பு வரும் காட்சிகள் நமக்கும் பைத்தியம் பிடிக்க வைக்கின்றன. வசனம் இல்லாமல் காட்சிகளை வைக்கிறேன் பார்… என்கிற ரீதியில் காட்சிகள் இருக்க பல காட்சிகளில் வெறுப்பாகிவிடுகிறது. படமும் அப்படியே நகராமல் இருப்பது போன்ற ஒரு பீல் நமக்குள் உருவாக்கிவிடுகிறது.

படத்தில பாராட்டப்பட வேண்டிய விஷயம் டயலாக். ‘புடிச்ச வேலையை செய்யணும்… இல்லன்னா செத்துரணும்…’ இது மாதிரியான தத்துவம் சார்ந்த டயலாக் படம் முழுக்க விழுந்து தெறிக்குது. ரிச்சாவிடம் போன் பண்ணி தனுஷ் பேசும், ‘எனக்கு பிடிச்சிருக்கு அதனால இந்த வேலையை செய்யுறேன். பெரிய ஆளாகிறனோ இல்லையோ எனக்கு இந்த வேலையைச் செய்யும் போது கிடைக்கிற சந்தோஷமே தனி…’ என பேசும் நீண்ட டயலாக் வேலையை நேசிச்சு பண்ணுகிற எல்லாருக்குமே பிடிக்கும். ரிச்சா, தனுஷின் நண்பனிடம் பேசும், ‘உன் பொண்டாட்டிய நீயே தேடிக்க… அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆச படாத’ டயலாக் அடுத்தவன் மனைவிமேல ஆசைப்படுறவங்களுக்கு சவுக்கடி.

போட்டோகிராபராக போராடுகிற தனுஷ், பைத்தியக்கார தனுஷ், புகழ்பெற்ற போட்டோகிராபர் என்கிற மூணு ஸ்டெப்ல நடித்திருக்கிறார் தனுஷ். மூன்றிலுமே நன்றாகவே நடித்திருக்கிறார். அந்த பொண்ணு ரிச்சா. செம பெர்பாமென்ஸ். அபார்ஷன் ஆனதால் தரையில் படிந்த ரத்தத்தை துடைக்கிறப்போ அழுற காட்சி இருக்கே… அடஅட… ரசிகர்கள் மத்தியில் நல்லாவே ரீச்சாகிடுவார் இந்த ரிச்சா.

ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘நான் சொன்னதும் மழை வந்துச்சா…’ பாடல் மயக்க வைக்கும் மெலடியென்றால் மற்ற பாடல்களும் கேட்கிற ரசிக்க ஆட வைக்கிற ரகம். இடைவேளைக்கு பிறகு வசனம் அதிகமாக இல்லை என்பதால் இசைக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

மயக்கம் என்ன படத்தை எழுதி இயக்கியிருப்பவர் செல்வராகவன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் 7 ஜி ரெயின்போ காலனி படத்தையே நினைவுக்கு கொண்டு வருகின்றன. அந்த படத்தின் கதையில் பாதியை எடுத்து பட்டி டிங்கரிங் பார்த்து மயக்கம் என்ன என்ற முழு படத்தையும் இயக்கியிருப்பது போன்ற உணர்வு எழுகிறது. இடைவேளை வரை செல்வராகவன் படமாக இருக்கும் மயக்கம் என்ன இடைவேளைக்கு அப்புறம் ‘விக்ரமன்’ படமாக மாறியிருக்கிறது. காட்சிகளில் கவனம் செலுத்திய செல்வராகவன் காட்சிகளின் நீளத்திலும கவனம் செலுத்தியிருந்தால் படம் ரொம்பவே ஸ்லோவாகி ரசிகர்களை நெளிய வைப்பதை தவிர்த்திருந்திருக்கலாம்.

மயக்கம் என்ன – விக்ரமன் படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum