தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயக்கம் என்ன பார்ட் டூ

Go down

மயக்கம் என்ன பார்ட் டூ Empty மயக்கம் என்ன பார்ட் டூ

Post  ishwarya Thu Mar 07, 2013 11:58 am

இந்த பார்ட் டூ-வின் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் சுந்தருடையது. சுந்தர்...? நீங்கள் நெற்றிச் சுருக்குவது தெ‌ரிகிறது. மயக்கம் என்ன படத்தில் ‌ரிச்சாவின் காதலராக வருவாரே, தாடி வைத்து... எஸ், அவர்தான்.

அடிப்படையில் போட்டோகிராஃபரான சுந்தரை செல்வராகவன்தான் நடிகராக்கினார். பிரபல போட்டோகிராஃபர் என்பதால் ‌ரிச்சாவுக்கும் அவ‌ரிடம் மயக்கம் இருந்திருக்கிறது. ‌ரிச்சாவை விமான நிலையத்தில் பிக்கப், ட்ராப் செய்யும் வேலையை சந்தேஷமாக ஏற்றுக் கொண்டார் சுந்தர். இதுவரை எல்லாமே ஓகே.

மயக்கம் என்ன படத்தைப் போல ‌ரிச்சாவுக்கு இப்போது மயக்கம் தெ‌ளிந்திருக்கிறது. சுந்தரை அவாய்ட் செய்கிறாராம். இப்படியேவிட்டால் ஏதாவது தனுஷ் உள்ளே புகுந்து கா‌ரியம் கந்தலாகிவிடும் என்று சுந்தர் திருமணம் செய்யும்படி ‌ரிச்சாவை நெருக்குகிறாராம்.

சினிமாவின் படிக்கட்டுகளில் இப்போதுதான் கால் வைத்திருக்கிறேன், இன்னும் ஆயிரம்படி மிச்சமிருக்கிறது என்று சுந்த‌ரின் பேச்சை காதிலேயே வாங்கவில்லையாம் ‌ரிச்சா.

கூடிய விரைவில் அதி‌ரி புதி‌ரியான கிளைமா‌க்ஸை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
மயக்கம் என்ன சுந்தர், ரிச்சா, தனுஷ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum