கிருஷ்ணர் போல குழந்தை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
கிருஷ்ணர் போல குழந்தை
பொதுவாக பெருமாள் கோயில்களில் கிருஷ்ணர் சந்நிதி இருக்கும். குருவாயூர் போன்று, தனியாக கிருஷ்ணர் கோயில்களும் உண்டு. இங்கெல்லாம் பொதுவாக ஒரு பழக்கம் உள்ளது. குழந்தைப்பேறு வேண்டுபவர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள தவழும் கிருஷ்ணர், ஆலிலை கிருஷ்ணர் போன்ற விக்ரகங்களை அர்ச்சகரிடமிருந்து வாங்கி தம் மடியில் சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அவரிடம் திருப்பிக் கொடுப்பார்கள்.
அடுத்த பத்தாவது மாதம் கிருஷ்ண விக்ரகம் போன்ற அழகான குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில், தொட்டிலில் உள்ள கிருஷ்ண விக்ரகத்தை பக்தர்களிடம் தருகிறார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு திருப்பிக் கொடுக்கிறார்கள். இதற்கு, தனியாகக் கட்டணம் உண்டு.
மன்னார்குடியில் ஸ்ரீராஜகோபாலசுவாமி ஆலயத்தில் இரவு அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு, சந்தான கோபாலன் விக்ரகத்தை அர்ச்சகர் பக்தர்களிடëம் கொடுத்து பின்னர் வாங்கிக் கொள்கிறார். கோயில் திறந்திருக்கும் நேரத்தில் சென்று இதை நிறை வேற்றிக் கொள்ளலாம்.
கும்பகோணம் ராமர் கோயிலில் குழந்தை வரம் வேண்டுபவர், காலையில் சென்று ஆலிலை கிருஷ்ணன் விக்கிரகத்தைப் பெற்று மடியில் வைத்த பிறகு திருப்பிக் கொடுக்கின்றனர். ஊத்துக்காடு கிருஷ்ணர் கோயிலிலும் இத்தகைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» கிருஷ்ணர் போல குழந்தை
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» தீர்த்தமாடிய கிருஷ்ணர்
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» தீர்த்தமாடிய கிருஷ்ணர்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum