மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து
பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம்.
கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள். அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு.
தற்போது பெரியபாளை யத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில் தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள். அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர்.
அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது. சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும்.
எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து
» உணவுக்கட்டுப்பாடுதான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து!
» இயற்கையே மருந்து உணவே மருந்து
» காய மருந்து
» மருந்து 2:
» உணவுக்கட்டுப்பாடுதான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து!
» இயற்கையே மருந்து உணவே மருந்து
» காய மருந்து
» மருந்து 2:
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum