வகை மூலிகை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
வகை மூலிகை
வகை மூலிகை
வைகுண்ட ஏகாதசிக்கு முந்தின பத்து நாட்கள் பகல் உற்சவம் `திருமொழித்திருநாள்' என்ற பெயரில் கொண்டாடப்படும். பின்னர் வரும் பத்தநாள் இராப்பத்து `திருவாய்மொழித் திருநாள்' உற்சவம் எனக்கொண்டாடுவது வழக்கம். இந்த இராப்பத்து உற்சவத்தில் எண்ணைக் காப்பு உற்சவம் பார்க்க வேண்டியவற்றுள் ஒன்று.
பகவானை அடைய ஆண்டாள் நோன்பிருக்கிற நாட்கள் கண்ணுக்கு விருந்தாகும். மார்கழியில் நோன்பிருந்து, பங்குனியில் ரெங்க மன்னாரைக்கரம் பிடிப்பது திருக்கல்யாணத்திருவிழா. எண்ணைக்காப்பு உற்சவத்தில் ஆண்டாளுக்குத் தேய்த்துவிடுகிற எண்ணை 61 வகை மூலிகை கலந்து தயாரிக்கிறார்கள்.
விழாவில் பக்தர்களுக்கும் வழங்குகிறார்கள். `ஆண்டாள் தைலச்சக்கை' ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தின் அரிய சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலத்திற்கு வந்தவர்கள், வந்ததின் நினைவாக அதனை வாங்கிச் செல்வார்கள். பெண்கள் குளிப்பதற்கும், பால் அருந்தும் குழந்தை மேனி பால் கொச்சை நீக்கி, நறுமணத்திற்காகவும் உதவுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum