தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதைக்களமே புதிதாக இருக்கும் ‘கழுகு’?!

Go down

கதைக்களமே புதிதாக இருக்கும் ‘கழுகு’?! Empty கதைக்களமே புதிதாக இருக்கும் ‘கழுகு’?!

Post  ishwarya Tue Apr 09, 2013 5:33 pm

நூறு புதிய இயக்குனர்கள் அறிமுகமானால் வெற்றியை எட்டிப்பிடிப்பவர்கள் வெறும் ஐந்து சதவிகிதம் பேர் மட்டும்தான்! வெற்றிக்கு உத்திரவாதம் இல்லாத சினிமா வாழ்கையில், ஒரு அறிமுக இயக்குனரின் படைப்பில் உருவாகும் படம் திரையரங்குகளை எட்டும் முன்பே பாராட்டுகளை குவித்தால் எப்படியிருக்கும்! பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகர் தயாரிப்பில், சத்தியசிவா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் ‘கழுகு’ படத்துக்குதான் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருகின்றன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல்கள், டிரைலர் மற்றும் சில காட்சிகளை பார்த்து விட்டு, அறிமுக இயக்குனரை “ ஒரு குட்டி பாலா” என்றே சொல்லி விட்டார்கள்.

அல்லிபாபா, கற்றது களவு போன்ற படங்களில் நடித்த இளம் நாயகன் கிருஷ்ணாவுக்கு இது மூன்றாவது படம். இவருக்கு ஜோடி வெப்பம் படத்தில் துணிச்சலாக பாலியல் தொழிலாளி கதாபாத்திரம் ஏற்ற பிந்துமாதவி. ஊட்டிக்குப் போய் தற்கோலை செய்து கொள்ளுபவர்களின் சடலங்களை மலையடிவாரத்திலிருந்து மீட்டபதற்காக சிலர் இருப்பார்கள்.

அந்த கதாபாத்திரத்தில்தான் கிருஷ்ணா, நடித்திருக்கிறார். கதைக் களமே புதிதாக இருகிறது கழுகின் பார்வையும் தமிழ்சினிமாவுக்கு புதிதாக இருந்தால் நல்லதுதான்! இதில் கவணிக்க வேண்டிய விஷயம், படத்தின் நாயகன் கிருஷ்ணா தயாரிப்பாளரின் இளையமகன்!

அப்படியென்றால் மூத்தமகன் யார்? அஜித்தின் பில்லா உட்பட தொடர்ந்து வெற்றிபடங்களை இயக்கி வரும் விஷ்ணுவர்த்தன்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum