ஒஸ்திக்கு தடை நீங்கியதா… இல்லையா…! தொடரும் குழப்பம்!!
Page 1 of 1

இந்தியில் சல்மான் கான் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தபாங் படம், தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. சிம்பு, ரிச்சா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தரணி இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். படம் அடுத்தவாரம் 8ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் அறிவித்து இருந்தனர். ஆனால் இப்போது படத்தை ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை என்று திரைப்பட சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை-செங்கல்பட்டு-காஞ்சீபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், “ஒஸ்தி திரைப்படத்துக்கு எந்தவிதமான தடையையும் மேற்கண்ட அமைப்புகளில் பங்கு பெற்றுள்ள எவரும் விதிக்கவில்லை. ஆகவே `ஒஸ்தி திரைப்படம் வெளிவருவதில், திரைப்பட சங்கங்களின் சார்பில் எந்த தடையும் இல்லை. என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒஸ்தி படத்துக்கு தடை என்ற முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருபக்கம் ஒஸ்தி படத்தை, திரையிட எந்த தடையும் இல்லை என்று பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். மற்றொருபுறம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சம்பந்தப்பட டி.வி., நிறுவனம் பழைய டெபாசிட் தொகையை திருப்பி தந்தால் தான், படத்தை திரையிட விடுவோம் என்று கூறி வருகிறார். இப்படி மாறுபட்ட கருத்து நிலவி வருவதால் சொன்ன தேதியில், அதாவது டிச.8ம் தேதி படம் ரிலீசாகுமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித்தின் அடுத்தபடம் யாருக்கு? தொடரும் குழப்பம்…!
» ஒஸ்திக்கு ஓஸ்தியான பிரியாணி விருந்து
» ஒஸ்திக்கு டொரொண்டோவில் அமோக வரவேற்பு
» சன் டிவி-யால் ஒஸ்திக்கு வந்த சோதனை
» ஒஸ்திக்கு ரஜினி தந்த பாராட்டு – குஷியில் தரணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum