பறவைத் தோஷம் குறைய
Page 1 of 1
பறவைத் தோஷம் குறைய
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும். அடிக்கடி மலம் தண்ணீர் போல போகும். சில நேரங்களில் மலம் மாவு போலவும், பச்சையாகவும் கழியும். வாந்தி ஏற்படும். முகம் சோர்வாக காணப்படும். கழுத்து மெலிந்து காணப்படும். குழந்தைகள் அலறி அழும். நாக்கு வறட்சியாகக் காணப்படும். மூச்சு விடும் போது நெஞ்சில் குழி விழும். இசிவு ஏற்படும். முகம் மஞ்சள் நிறமாக காணப்படும். உடலில் பச்சிலை நாற்றமடிக்கும். இந்த நோய் குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது ஏற்படும். இதுவே பறவைத் தோஷம் எனப்படும்.
மருந்து 1
ஓரிதழ் தாமரை
ஓரிதழ் தாமரை
வால்மிளகு
வால்மிளகு
விடத்தலை
விடத்தலை
தேவையான பொருட்கள்:
ஓரிதழ் தாமரை.
விடத்தலை மர வேர்
சுக்கு.
வெந்தயம்.
வால்மிளகு.
செய்முறை:
ஓரிதழ் தாமரை, விடத்தலா வேர், சுக்கு, வெந்தயம், வால்மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சவேண்டும். கஷாயம் அரைக்கால் லிட்டராகச் சுண்ட காய்ச்சியவுடன் இறக்கி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த கஷாயத்தை வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட கொடுத்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
இவ்வாறு சாப்பிட கொடுத்து வந்தால் பறவைத் தோஷம் குறையும்.
**************************************************************
மருந்து 2
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி வோ்.
பிச்சி வேர்
வெங்காயம்.
சிற்றாமணக்கு எண்ணெய்.
செய்முறை:
மணத்தக்காளி வேர், பிச்சி வேர், வெங்காயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து சிற்றாமணக்கு எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட கொடுத்து வரவேண்டும். இந்த எண்ணெயை தலையின் உச்சியிலும் தேய்த்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
இவ்வாறு சாப்பிட கொடுத்து வந்தால் பறவைத் தோஷம் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum