நாமதான் வளர்த்துவிடணும்…..நடிகர் பிரபு ரெகமன்டேஷன்
Page 1 of 1

ஆந்திரா ஸ்டார் மோகன்பாபுவுக்கும் அந்தகால சென்னைக்கும் அநியாய
நெருக்கம் உண்டு. இவரும் ரஜினியும் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக
படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே இணைந்து ஊர் வம்பை இழுத்தவர்களும் கூட.
இந்த பசுமைகால வாழ்வை அப்படியே நினைவில் வைத்திருக்கும் மோகன்பாபு இப்பவும்
ரஜினியை மீடியா முன்பு அவன் இவன் என்று சொல்வதே அலாதி அழகுதான்.
தனது வாரிசை எப்படியாவது தமிழ் படங்களில் வெற்றி பெற வைத்துவிட வேண்டும்
என்ற மாறாத ஆசையும் இருக்கிறது மோகன்பாவுக்கு. என்னை தெரியுமா என்று
ஏற்கனவே ஒரு படத்தை இங்கு ரிலீஸ் செய்தார் அவர். அது மோகன்பாபுவுக்கும்
சரி, அவரது மகன் மனோஜுக்கும் சரி, கொழுத்த லாபத்தை கொடுக்கவில்லை எந்த
வகையிலும்.
இந்த நிலையில்தான் மீண்டும் முயல்கிறார் மனோஜ். இந்த முறை இந்த
முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது மோகன்பாபுவின் மகள் லட்சுமி.
இவர் தயாரிக்கும் புதிய படத்தில் தம்பியை ஹீரோவாக்கிவிட்டார். இது தமிழ்
தெலுங்கில் எடுக்கப்படும் படம் என்று சாதித்தார்கள் இருவரும்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபு ஒரு விஷயத்தை சொன்னார்
இப்பட பூஜையில். நடிகர் திலகம் சிவாஜிதான் மோகன்பாபுவை முதலில் தமிழில்
நடிக்க வைத்தாராம். இவர் நடித்த அண்ணன் ஒரு கோவில் படத்தில் முக்கிய
வேடத்தில் நடித்திருக்கிறார் மோகன். ”நான் சின்ன புள்ளையா இருக்கிற
காலத்திலிருந்தே ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல அன்பும் நெருக்கமும் உண்டு.
வந்தாரை வாழ வைக்கும் பண்பு நம்ம எல்லாருக்கும் இருக்கு. அதனால்
ஆந்திராவில் செட்டில் ஆகிட்டாலும் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து இங்கேயே படிச்ச
மனோஜுக்கும் இந்த படத்திற்கும் நீங்கதான் சப்போர்ட் பண்ணணும்” என்று
கேட்டுக் கொண்டார் பிரபு.
இப்படத்தில் மனோஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தீக்ஷாசேத். ராஜபாட்டை
வந்து வெற்றி பெற்றால் மனோஜ் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ஒரு
அட்ராக்ஷன் கிடைக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசல்’ விவகாரம்: அன்புமணிக்கு நடிகர் பிரபு பதில்
» கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா: நடிகர், நடிகைகள் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார் பிரபு
» பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum