தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வில்லியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சினேகா…!

Go down

வில்லியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சினேகா…! Empty வில்லியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சினேகா…!

Post  ishwarya Tue Apr 09, 2013 11:34 am

ஒரு படத்திலாவது வில்லியாக நடித்து விட வேண்டும், அது தான் என்னுடைய ட்ரீம் ரோல் என்று கூறுகிறார் நடிகை சினேகா. புன்னகை இளவரசியாக இளைஞர்கள் மனதில் ஒட்டிக்கொண்ட சினேகா, தன் அழகாலும், வசீகர சிரிப்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து கொண்டுள்ளார். இப்போது காதல், கல்யாணம் சூட்டிங் என்று ஒரே பரபரப்பாக காணப்படுகிறார்.

சமீபத்தில் அவரை சந்தித்த போது முன்பைவிட கூடுதல் பொலிவோடும், அழகோடும் காணப்பட்டார். முகத்தில் கல்யாண களை வந்துவிட்டதே என்று அவரிடம் சொன்ன போது கொஞ்சம் வெட்கமும், சிரிப்பும் அவரது முகத்தில் ஒட்டிக்கொண்டது. அவரிடம் பேசியபோது, இப்பவும் தான் கல்யாணம் பண்ணப்‌போகும் பிரசன்னாவை போடா, வாடா என்று தான் அழைப்பாராம் சினேகா. சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளதால் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக கூறும் சினேகா, விரைவில் கோச்சடையான், மற்றும் யுவன் யுவதி டைரக்டர் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்கிறார்.

சினிமாவில் நீங்கள் எண்ட்ரீ ஆனதில் இருந்து இதுநாள் வரை எத்தனையோ கேரக்டரில் நடித்துள்ளீர்கள். உங்களுக்கு என்று ட்ரீம் ரோல் ஏதாவது இருக்கா…? என்று சினேகாவிடம் கேட்டால், ஒரு படத்திலாவது வில்லியாக நடித்து விட வேண்டும். ஆனா அப்படி ஒரு கேரக்டர் இதுநாள் வரை அமையவில்லை என்கிறார்.

சரி! கல்யாணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அதைப்பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை என்கிறார் சிறு புன்னகையோடு புன்னகை இளவரசி சினேகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum