தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படுக்கையறை காட்சிகளில் நடிக்க முடியாது: சினேகா

Go down

படுக்கையறை காட்சிகளில் நடிக்க முடியாது: சினேகா Empty படுக்கையறை காட்சிகளில் நடிக்க முடியாது: சினேகா

Post  ishwarya Sat Mar 16, 2013 12:47 pm

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசியாக வலம் வந்தவர் சினேகா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், கடந்த வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து வரும் இவர், கடைசியாக நடித்து வெளிவந்த ‘ஹரிதாஸ்’ படம் சினேகாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது தமிழ், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு தனது உடற்கட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாதவாறு பராமரித்து வரும் சினேகாவைத் தேடி இளமை துள்ளலுடன் உள்ள கதைகளோடு இயக்குனர்கள் அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஒரு இயக்குனர் சொன்ன கதை சினேகாவுக்கு மிகவும் பிடித்திருந்தும், தற்போதைய சூழ்நிலையில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, கணவன்-மனைவியின் அன்யோன்யத்தை சொல்லும் நல்ல கதைதான். ஆனால் படுக்கையறை காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதுவும் மேலோட்டமாக இல்லாமல் ரொம்பவும் ஆழமாக வைத்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டபின் இதுபோல் மற்ற நடிகர்களுடன் அதிக நெருக்கமாக நடித்தால் அது குடும்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும். முந்தைய படங்களில் இதுபோன்று நடித்தபோதேல்லாம் நான் தனி மனுஷி. ஆனால் இப்போது நான் இல்லத்தரசி எனக் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum