மான நஷ்ட வழக்கு! கரிகாலன் தயாரிப்பாளர்கள் முடிவு!!
Page 1 of 1

கரிகாலன் படம் நிச்சயம் வரும் என்று அப்படத்தை தயாரித்து வரும் சில்வர்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படம் கரிகாலன். இப்படத்தின் கதையும், தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று சென்னை போரூரை சேர்ந்த ராஜசேகர் படத்தின் கதாநாயகன் விக்ரம் உட்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துள் படத்தின் தயாரிப்பாளர்களான பார்த்திபன், வாசன் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில், ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்கிற முறையில் நாங்கள் சந்திக்கத் தயார் நிலையில் இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குனரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். இந்நிலையில் ராஜசேகர் எனும் அந்த நபர் வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்களின் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனாகிய விக்ரமை சம்மந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல். இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் விளைவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் ராஜசேகர் மீது நாங்கள் மான நஷ்ட வழக்கு தொடுக்க ஆலோசித்து வருகிறோம். வழக்கு நிலுவையில் இருக்க அதை எதிர்கொள்ளும் சூழலில் மேலும் விளக்கம் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.நேர்மையான முறையில் வழக்கை சந்தித்து நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சந்திக்க தயார்நிலையில் இருக்கிறோம். கரிகாலன் நிச்சயம் வருவான், என்று கூறியுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நஷ்ட ஈடு தராத விஜய் – 13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
» புதிய சங்கம் உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவு!
» "சத்திரம் பேருந்து நிலையம்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!
» விஜய் பட நஷ்ட விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடி உதை… ‘கவுன்சில்’ கலாட்டா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum