"சத்திரம் பேருந்து நிலையம்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு
Page 1 of 1

"சத்திரம் பேருந்து நிலையம்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இருவர் மீது திருச்சி மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி தனரத்தினம் நகர் 4வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் எம். நசிருதீன் (32). இவர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பது:
உறையூரைச் சேர்ந்த அலாவுதீன், பீமநகர் சாகுல்ஹமீது ஆகியோர் சத்திரம் பேருந்து நிலையம் என்ற திரைப்படத்தை இணைந்து தயாரித்து வந்தனர். படத்துக்கு நிதி தேவைப்பட்டதால் அலாவுதீன் என்னிடம் பண உதவி செய்யுமாறு கோரினார்.
இதைத் தொடர்ந்து, 2010, ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு தவணைகளில் ரூ.20 லட்சம் வரை அலாவுதீனிடம் அளித்துள்ளேன். பணத்தை திருப்பி கேட்ட போது, தயாரிப்பாளர்களில் ஒருவராக என்னை சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்.
படநிறுவனத்துக்கு பெயரைப் பதிவு செய்யும் போது என்னையும் ஒரு பங்குதாரராகக் கொண்டுதான் பதிவு செய்தனர். ஆனால்,படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டமாக லேப் ஒன்றில் காட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின்போது, படத் தயாரிப்பாளர்கள் பெயரில் என்னுடைய பெயரைச் சேர்த்து வெளியிட அலாவுதீனும், சாகுல்ஹமீதும் மறுத்துவிட்டனர்.
ஆனால், சத்திரம் பேருந்து நிலையம் படத்துக்கு நான் மட்டும்தான் தயாரிப்பாளர், வேறு யாரும் கிடையாது என அலாவுதீன் எனக்கு பதில் அனுப்பினார். மேலும், நான் பணம் கேட்டபோது பணம் வந்தால்தான் திருப்பித் தர முடியும் என்று தெரிவித்து விட்டார்.
இதுகுறித்து மாநகரக் குற்றப்பிரிவில் 2010-ம் ஆண்டிலேயே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து குற்றவியல் நடுவர் மன்றம் எண் 5-ல் வழக்குத் தொடர்ந்தேன். நீதிமன்றம் வழக்குப் பதிய உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவின்படி, அலாவுதீன், சாகுல் ஹமீது ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்குப் பதிய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவின் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். இதன்பேரில், சத்திரம் பேருந்து நிலையம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அலாவுதீன், சாகுல் ஹமீது ஆகிய இருவரும் மீது மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவம்பர் 20-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வாக்கு எண்ணிக்கை
» மான நஷ்ட வழக்கு! கரிகாலன் தயாரிப்பாளர்கள் முடிவு!!
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர்கள் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum