தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

Go down

தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!! Empty தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:23 pm



சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை எதிர்த்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதையடுத்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, `தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையவில்லை. தமிழக மக்களுக்குத்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. அவர்கள்தான் 5 ஆண்டுகளுக்கு பாதிப்படைவார்கள் என்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து சேலத்தை சேர்ந்த வக்கீல் அறிவழகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு செலுத்துவதற்கு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, அடுத்தவருடைய உரிமையை பாதிக்கும் விதத்தில் பேசக்கூடாது. இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, `எங்களுக்கு தமிழக மக்கள் ஓய்வு அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு, `வரும் 5 ஆண்டுகளில் மக்களுக்கு துன்பம் ஏற்படப்போகிறது என்று கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில், ஆளும் கட்சியின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும். இந்த புதிய ஆட்சியை குஷ்பு விமர்சனம் செய்வதில் உள்நோக்கம் உள்ளது. எனவே குஷ்பு மீது இந்த தண்டனை சட்டம் 504 (அவமானமான வார்த்தைகளை பேசி, பொது அமைதியை கெடுத்தல்) கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.சுதந்திரம் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், `இந்திய தண்டனை சட்டம் 504ம் பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க முடியாது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மொஹான் பீரிஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் தள்ளுபடி
» விஸ்வரூபத்துக்கு தடைகோரி கிறிஸ்தவர் வழக்கு! தள்ளுபடி செய்த நீதிபதிகள்!
»  இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
»  "விஸ்வரூபம்' தடை பற்றிய கருத்து: விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு
»  கிறிஸ்தவர்களை புண்படுத்தும் காட்சி: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான இன்னொரு மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum