ரஜினியுடன் நடிக்க இந்தி படத்தில் இருந்து விலகலா?- தீபிகா படுகோனே பேட்டி
Page 1 of 1

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே இவர் ஷாருக்கானுடன் நடித்த ‘ஓம்
சாந்தி ஓம்’ படம் ஹிட்டானதைத் தொடர்ந்து பிரபலமானார். தமிழில் இவர்
ரஜினியுடன் ‘ராணா’ படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானார். பட தொடக்க
விழாவிலும் பங்கேற்றார். ரஜினிக்கு உடல் நலம் குன்றியதால் அந்தப் படம்
தள்ளிப்போனது. ரஜினி உடல் நலம் தேறியதும் ராணாவுக்குப்பதில் கோச்சடையான்
படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், விரைவில் படப்பிடிப்பு
தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தீபிகா படுகோனே புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார்.
அவர் ரேஸ்-2 இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரபல தயாரிப்பாளர்
ரமேஷ் தாரணி இந்த படத்தை தயாரிக்கிறார். அவர் மும்பையில் உள்ள சினிமா
கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா படுகோனே மீது ஒரு
புகார் கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ்-2 இந்திப் படத்தை தயாரித்து
வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவர் ஒரு வாரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது
திடீர் என்று ரேஸ்-2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார்.
ஆலிவுட் பட வாய்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்து
இருக்கிறார். இதனால் ரேஸ்-2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற
முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் பற்றி
தயாரிப்பாளர்கள் சங்கம் தீபிகா படுகோனேக்கு தகவல் தெரிவித்து விளக்கம்
அளிக்குமாறு கூறியுள்ளது.
ரஜினி படத்தில் நடிப்பதற்காக இந்திப்படத்தில் இருந்து தீபிகா படுகோனே
விலகி விட்டதாகவும், புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்
அளித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:-
ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து
நான் விலகவில்லை. ரஜினியுடன் நடிக்க ரொம்ப நாளைக்கு முன்பே ஒப்பந்தம்
போடப்பட்டுவிட்டது. ‘ரேஸ்-2′ படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து
விட்டு படப்பிடிப்பு நடத்தாமல் 1 1/2 வருடம் தாமதம் செய்தனர். இதனால்
கால்ஷீட் விரயமானது. வேறு படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளதால் பிரச்சினைகள்
எழுந்தது.
எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். என்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. நான் விரைவில் பதில் அனுப்புவேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே
» “ராணா” படப்பிடிப்பு ஏற்பாடுகள் தீவிரம் ரஜினியுடன் நடிக்க தயாராகும் தீபிகா படுகோனே, இலியானா கதையில் மாற்றம்; ஆக்ஷன் காட்சிகள் குறைப்பு
» மேக்கப் பொருந்தவில்லை: தீபிகா படுகோனே மீது ரஜினி அதிருப்தி; “ரானா” படத்தில் இருந்து நீக்கப்படுவாரா?
» கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி
» இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum