வடகொரியா மிரட்டல் எதிரொலி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டம்
Page 1 of 1
வடகொரியா மிரட்டல் எதிரொலி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டம்
வடகொரியா மிரட்டல் எதிரொலியாக பதுங்கு குழிகளை தகர்க்கும் நீண்ட தூரம் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை வாங்கப்படும் என தெரிகிறது.
போர் மூளும் பதற்றம்
கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா நாட்டு ராணுவ கூட்டு போர் பயிற்சி நடைபெறுகிறது. இதில் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் பயன்படுத்துகின்றன. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
எதிரி நாடுகளை ஏவுகணை வீசி தாக்குவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்ததுடன் படைகளை உஷார்படுத்தி வருகிறது. இதன் விளைவாக கொரியா தீபகற்ப பகுதியில் போர் வெடிக்குமா? என்ற பதற்றம் நிலவுகிறது.
கடலோரப் பகுதிக்கு ஏவுகணைகள்
தென்கொரியாவுடனான தகவல் தொடர்புகளை வடகொரியா துண்டித்து விட்டது. இரு நாடுகளும் இணைந்து நடத்தி வந்த தொழில் மையத்தையும் வடகொரியா மூடி விட்டது. அங்கு பணியாற்றும் தென்கொரியா தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அறிவித்து விட்டது. 10–ந் தேதிக்குள் தொழிற்சாலைகளை மூடி விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வடகொரியா தனது நாட்டின் கிழக்கு கடற்பகுதிக்கு குறைந்த தூர ஏவுகணைகளை அனுப்பி வைப்பதாக நேற்று ஒரு தகவல் வெளியானது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
பதிலடிக்கு தயார்
வடகொரியா தாக்கினால் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் தென்கொரியாவும் தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போதைய பதற்ற சூழ்நிலை குறித்து தென்கொரியா ராணுவ மந்திரி கிம் குவான் ஜின் நேற்று ராணுவ அதிகாரிகள், பாராளுமன்ற குழுவை கூட்டி ஆய்வு மேற்கொண்டார்.
அதில் வான்வெளி பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் இருந்து ஏவுகணைகள்
நட்பு நாடான அமெரிக்காவில் இருந்து குண்டு வீச்சு போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் தென்கொரியாவிடம் இருக்கின்றன.
இருப்பினும் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து பதுங்கு குழிகளை தகர்க்கும் சக்தி கொண்ட வான்வழியாக சென்று தரை பகுதியை தாக்கி அழிக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை வாங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அநேகமாக இந்த ஏவுகணைகள் ஜெர்மனி, சுவீடன் நாடுகளில் இருந்து வாங்கப்படும் என தெரிகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வடகொரியா மிரட்டல் எதிரொலியாக பதுங்கு குழிகளை தகர்க்கும் நீண்ட தூரம் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை வாங்கப்படும் என தெரிகிறது. போர் மூளும் பதற்றம் கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா நாட்டு ராணுவ
» தீவைத்து எரிப்பதாக மிரட்டல் எதிரொலி:குருவாயூர், கன்னியாகுமரி, அனந்தபுரி ரெயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» ஓவியா சினிமாவில் எவ்வளவு தூரம் கவர்ச்சி காட்டுவார்?
» ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ மயக்கம் என்ன படத்தின் பாடல் (Official video song added)
» தீவைத்து எரிப்பதாக மிரட்டல் எதிரொலி:குருவாயூர், கன்னியாகுமரி, அனந்தபுரி ரெயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» ஓவியா சினிமாவில் எவ்வளவு தூரம் கவர்ச்சி காட்டுவார்?
» ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ மயக்கம் என்ன படத்தின் பாடல் (Official video song added)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum