தீவைத்து எரிப்பதாக மிரட்டல் எதிரொலி:குருவாயூர், கன்னியாகுமரி, அனந்தபுரி ரெயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Page 1 of 1

சென்னை, -
குருவாயூர், கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களை தீ வைத்து எரிப்பதாக வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து தென்மாவட்ட ரெயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில்களை தீயிட்டு எரிப்போம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மேலாளர் உமா சங்கருக்கு நேற்று பகலில் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.அந்த கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை(24-ந் தேதி) முதல் வெள்ளிக்கிழமைக்குள்(புனித வெள்ளி) குருவாயூர், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, பெட்டிகளை தனித்தனியாக கழற்றி விடுவோம் அல்லது தீயிட்டு எரிப்போம். முடிந்தால் தடுத்துப்பார். நாங்கள் வியாபாரியாகவோ, திருநங்கையாகவோ, பொதுமக்களாகவோ, போலீசாகவோ வருவோம். ரெயில்கள் காட்டுப்பாதைக்குள் வரும்போது எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவோம். சென்னை வருவதற்குள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று எழுதப்பட்டு இருந்தது.
தமிழ் வீரப்படை
மேலும் கடிதத்தில் தமிழ் வாழ்க என்றும், தமிழ் வீரப்படை, கடிதத்தை எழுதியவர் பெயர் செந்தமிழ் அழகன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து ரெயில்வே மேலாளர் உமா சங்கர் எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, ரெயில்வே உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் தென் மாவட்ட ரெயில்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.இது குறித்து ரெயில்வே போலீஸ் எஸ்.பி.கயல்விழி கூறியதாவது:
ஆயுதம் ஏந்திய போலீசார்
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். அதன்படி ஒவ்வொரு வண்டியிலும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் 2 போலீசார் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரெயில்கள் நின்று செல்லும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வடகொரியா மிரட்டல் எதிரொலி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டம்
» குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

» நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!
» கன்னியாகுமரி சாம்பார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum