விளையாட வா – திரை விமர்சனம்
Page 1 of 1
விளையாட வா – திரை விமர்சனம்
குப்பத்தில் வசிக்கும் கட்டிட தொழிலாளி பொன்வண்ணனுக்கு கேரம்
விளையாட்டில் பைத்தியம். நண்பர்கள் மயில்சாமி, லிவிங்ஸ்டனுடன் ரோட்டில்
கேரம் விளையாடுவதுடன் போட்டிகளிலும் ஜெயிக்கிறார்.
அப்போது அனாதையாக திரியும் ஒரு சிறுவனை அழைத்து வந்து வளர்க்கிறார்.
அவனுக்கு கேரம் விளையாட்டில் ஆர்வம் இருப்பதை அறிந்து பயிற்சி அளிக்கிறார்.
சிறுவன் வளர்ந்து விஸ்வநாதன் பாலாஜியாகி கேரம் விளையாட்டில் நிபுணத்துவம்
பெற்று மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் ஆகிறார்.
அவர் சாதனைக்காக நாயகி திவ்யா கம்பெனியில் வேலை கிடைக்கிறது. இருவரும்
காதல் வயப்படுகின்றனர். திவ்யாவை மணக்க காத்திருக்கும் கம்பெனி பார்ட்னர்
மகன் பரத்ராஜூக்கு இவர்கள் காதல் எரிச்சலூட்டுகிறது. கேரம் விளையாட்டில்
தோற்கடிக்கவும், காதலை முறிக்கவும் முயற்சிக்கிறார். அதில் இருந்து மீண்டு
காதல் ஜோடி இணைந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்…
சாலையோர கேரம் விளையாட்டை மையப்படுத்தி காட்சிகளை ஜனரஞ்சகமாக
தொகுத்துள்ளார் இயக்குனர் விஜய் நந்தா. பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், மயில்சாமி
மூவரும் நடுத்தர வர்க்க வாழ்க்கையையும் நட்பையும் பிரதிபலிக்கின்றனர்.
விஸ்வநாதன் பாலாஜி குப்பத்து கேரம் விளையாட்டு வீரர் கேரக்டரில் கச்சிதம்.
கொடைக்கானலில் எதிராளியின் கூட்டுச்சதியை முறியடித்து போட்டியில்
ஜெயிப்பது விறுவிறுப்பு. வளர்ப்பு தாய், தந்தை மேல் பாசம் வைப்பதிலும்
தம்பி விரோதியாகி வீட்டை விட்டு வெளியேற்றும்போது உடைந்து தவிப்பதிலும்
நெகிழ்ச்சி. திவ்யா கலகலப்பாக வருகிறார். அண்ணன் ஜெயிக்க மனோபாலாவுடன்
இணைந்து கூட்டாக சதி திட்டங்கள் வகுப்பது கலகலப்பு… பரத்ராஜ்
வில்லத்தனத்தில் ஈர்க்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் அழகான அம்மா. காட்சிகளில் நாடகத்தனம் எட்டி
பார்ப்பது பலவீனம். ஆனாலும் கேரம் விளையாட்டை விறுவிறுப்பாக நகர்த்தியது
ஈர்க்கிறது. ஸ்ரீமுரளி இசையில் பாடல்கள் இதம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» அம்புலி 3 டி – திரை விமர்சனம்
» வெங்காயம் – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» அம்புலி 3 டி – திரை விமர்சனம்
» வெங்காயம் – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum