தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு இல்லை! தமன்னா

Go down

நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு இல்லை! தமன்னா Empty நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு இல்லை! தமன்னா

Post  ishwarya Fri Apr 05, 2013 5:28 pm

எனக்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்திற்கு வரவேண்டும் என்ற ஆசையெல்லாம்
இல்லை, என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழில் வேங்கை படத்திற்கு பிறகு
புதிய படங்களில் நடிக்காத தமன்னா தற்போது தெலுங்கில் பிஸி நடிகையாக
இருக்கிறார். தற்போது இரு படங்களில் நடித்து வரும் தமன்னா, அந்த படங்களை
முடித்த கையோடு தமிழ் சினிமாவிற்கு வர திட்டமிட்டுள்ளாராம். இதற்காக
இப்போதே கதை கேட்கும் பணிகளில் இறங்கியிருக்கும் தமன்னா, இந்திப்பட
வேட்டையிலும் இறங்கியிருக்கிறார்.
தனது சினிமா வாழ்க்கை குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில்,
வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம் என்று நம்ப
வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும். ஆனால் பேராசை மட்டும் கூடவே
கூடாது. பேராசை கேடு செய்யும். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற
எண்ணம் உள்ளது. உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் ஆர்வப்படுகிறேன்.
அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது.
தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து விட்டேன். வெற்றியும் தோல்வியும்
கிடைத்து விட்டது. இப்போது சினிமாவில் நிறைய பக்குவப்பட்டு விட்டேன்.
இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன், என்று
கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum