அமெரிக்க விழாவுக்கு செல்ல ரூ.25 லட்சம் கேட்ட நடிகர் வடிவேலு: தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி
Page 1 of 1

நடிகர்
வடிவேலுவின் அரசியல் நடவடிக்கைகள் திரையுலகில் அவருக்கு பின்னடைவை
ஏற்படுத்தின. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார்.
விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.
தேர்தலில் தி.மு.க. அணி தோல்வியை தழுவியதால் வடிவேலுக்கு சினிமா
வாய்ப்புகள் குறைந்தது. நில ஆக்கிரமிப்புகள் சர்ச்சைகளையும் சந்தித்தார்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது வடிவேலுவை மிகச்
சிறந்த காமெடி நடிகர் என்றும் அவரை திரையுலகினர் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவில் தமிழ்ச்
சங்கம் நடத்தும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு
வடிவேலுக்கு அழைப்பு வந்தது.
சினிமாவில் அவர் பிசியாக இருந்த போதும் இது போன்ற அழைப்புகள் வந்தன.
ஆனால் அவர் போகவில்லை. தற்போது கைவசம் படங்கள் இல்லாததால் தமிழ் சங்க
விழாவுக்கு வர வடிவேலு ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து விழா ஏற்பாடுகளை அமெரிக்க தமிழர்கள் தடபுடலாக செய்து
வந்தனர். ஆனால் திடீரென்று அமெரிக்க தமிழ் சங்க விழாவில் பங்கேற்க தனக்கு
ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று வடிவேலு நிபந்தனை விதித்ததாக தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால் தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து
அமெரிக்காவில் இருந்து விழாக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறும் போது வடிவேலு
ரூ.25 லட்சம் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
இவ்வளவு பணத்தை கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும்
விருப்பம் இல்லை. எனவே வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு
செய்துள்ளோம் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா
» சிம்புவிற்கு ரூ.5 லட்சம் சம்பளம்: பாடகர்கள் அதிர்ச்சி.
» சிம்புவிற்கு ரூ.5 லட்சம் சம்பளம்: பாடகர்கள் அதிர்ச்சி
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
» 25 லட்சம் கேட்டு தமிழ்ச் சங்கத்தினரை அதிர வைத்த வடிவேலு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum