IAS, வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன!
Page 1 of 1

IAS, IPS, IFS, வங்கிப்பணிகள், மற்றும் மாநில அரசு பணிகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப்படுகின்றது. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு நடுவம் செயல்படுகிறது. இந்த நடுவத்தின் கீழ் நாடு முழுவதும் 250 மண்டல களப்பணி நடுவங்கள் உள்ளன. தமிழகத்தில் 8 களப்பணி நடுவங்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள 300 பல்கலைக்கழகங்கள், 17 ஆயிரம் கல்லூரிகள், 20 லட்சம் பள்ளிகளில் ஒரு மொழிக்குள்ளேயும் பல மொழிகளுக்கு இடையேயான மொழி பாடத்திட்டத்தை உருவாக்குவது, வினாக்களை உருவாக்குவது போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.
இந்த நடுவங்கள் மூலம் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக மிகத்தரமான போட்டி தேர்வு வினாக்களை தயாரிக்கும் பணி நடக்கிறது. பாட வாரியாக சுமார் 6 லட்சம் வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த வினாக்கள் மைசூரில் மதிப்பீட்டு நடுவ வினா வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு நடத்தும் துறைகளுக்கு அல்லது மாநிலங்களுக்கு தேவைப்படும் போது தேவைப்படும் வினாக்களை வழங்கும்.
தனித் திறமைசாலிகளை உருவாக்குவது எப்படி என அய்க்கிய நாடுகளுடன் இணைந்து இந்த நடுவத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
தரமான கடினமான வினாக்களை தயாரித்து வழங்குவதால் வரும் காலங்களில் அரசுப் பணிகளில் மிகவும் திறமையானவர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன் பலன் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக கிடைக்கும் என அதன் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் சேவியர் தெரிவித்தார்.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய நடுவம் நெல்லை சேவியர்ஸ் கல்லூரியில் செயல்படுகிறது. இங்கு தமிழ், ஆங்கில வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 20 கல்லூரிகளின் தமிழ், ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் மற்றும் வினாக்கள் தயாரிப்பு பணி நடந்தது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வங்கிகளுக்கு ‘கணக்கு எண்’ குறித்து ரிசர்வ் வங்கி ஆணை!
» தலைக்கவசத்தில் தரம் முக்கியம்
» தரம் மிகு தமிழ்க் கல்வி
» இலங்கை வங்கி மீது தாக்குதல்
» ஆசியாவிலேயே நாய்களுக்கான முதல் ரத்த வங்கி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum