வங்கிகளுக்கு ‘கணக்கு எண்’ குறித்து ரிசர்வ் வங்கி ஆணை!
Page 1 of 1

வாடிக்கையாளர்கள் வேறு கிளைக்கு மாற விரும்பும் போது புதிய கிளையில் அவர்களின் கணக்கு எண்ணை மாற்றுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாறுதல் காரணமாகவோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதாலோ, ஒருவர் தனது வங்கி கணக்கை அருகில் உள்ள கிளைக்கு மாற்றி கொள்வார்கள். அப்படி மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன.
வேறொரு கிளைக்கு மாற்றும்போது அங்கு புதிய கணக்கு எண் தரப்படுகிறது. மேலும் புதிதாக கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
இந்த நடைமுறை சிக்கல்களை அகற்றி வங்கி கிளைகளை சுலபமாக மாற்றிக் கொள்ளும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு வங்கியில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர், அதே வங்கியின் வேறொரு கிளைக்கு தனது கணக்கை மாற்றிக் கொள்ள விரும்பினால் பழைய கணக்கு நம்பரையே பராமரிக்க அனுமதிக்க வேண்டும். புதிதாக கணக்கு தொடங்குமாறு அறிவுறுத்தவோ அல்லது புதிய நடைமுறைகளை பின்பற்றவோ கூடாது.
ஒருவர் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கினால் அதே வங்கியின் பிற கணக்கு மாற்றும்போது அந்த கிளையில் முந்தைய கணக்கு எண் செல்லுபடியாகும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» முக்தி கிடைக்க ரிசர்வ் செய்யலாம்!
» 6ம் வகுப்பு மாணவியை மது குடிக்க வைத்து கற்பழித்த இந்திய ரிசர்வ் படை வீரர்!
» இலங்கை வங்கி மீது தாக்குதல்
» ஆசியாவிலேயே நாய்களுக்கான முதல் ரத்த வங்கி!
» IAS, வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum