தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒலிம்பிக் திடல் அருகில் போராட்டம் நடத்தும் ஈழதமிழர்! காணொளி இணைப்பு

Go down

ஒலிம்பிக் திடல் அருகில் போராட்டம் நடத்தும் ஈழதமிழர்! காணொளி இணைப்பு Empty ஒலிம்பிக் திடல் அருகில் போராட்டம் நடத்தும் ஈழதமிழர்! காணொளி இணைப்பு

Post  amma Fri Apr 05, 2013 1:47 pm

கடந்த சூலை 22 அன்று ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில், ஈழத்தில் நடந்த சூலை படுகொலைகளின் 29 ஆணடு நினைவாக ஈழ தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. கிழக்கு லண்டன் Westham Park இல் உள்ள திடலில் கூடிய மக்கள் மாலை 6.05 க்கு ஊர்வலமாக புறப்பட்டு Romford தெரு மற்றும் Stratford High தெரு வழியாக மாலை 6.55 மணிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தமீழீழ தேசியக் கொடியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்தியும், பிரிட்டன் தேசியக் கொடியினை மருத்துவர் செல்வி மாதவி உதயணனும் ஏற்றி வைத்தனர்.

குர்திஸ்தான் விடுதலை இயக்கச் செயல்பாட்டாளர் Akaif Wan, அங்கு திரண்டிருந்த மக்கள் முன் உரையாற்றுகையில், குர்திஸ்தான் மக்களது போராட்டத்திற்கும் ஈழமக்களின் போராட்டத்திற்குமுள்ள ஒற்றுமைகள் பற்றி விவரித்தார். பிரிட்டன் தமிழ் மக்கள் நடத்தும் எல்லாப் போராட்டங்களிலும் தான் பங்கேற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

கிஙஸ்ரன் பல்கலைக்கழக விரிவுரையாளர் Dr. Andy Higgenbootom, ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனபடுகொலையை கண்டித்ததுடன், சிறைச்சாலைகளின் போர்க்கைதிகள் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது, இனப்படு கொலையின் இன்னொரு வடிவமே என்று குறிப்பிட்டார். அதன் பிறகு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் சிவந்தன் கோபி, தான் முன்வைத்துள்ள அய்ந்து கோரிக்கைகள் பற்றி விளக்கினார்.
அது குறித்த காணொளி இங்கே:

1. தொடர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தடைசெய்ய வேண்டும்

2. அய்.நா. ஆணைக் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க வேண்டும்.

3. தமிழீழத்தில் விரைவாக நடைபெற்று வரும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும்.

5. வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழ தமிழர்களை, இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.

மேலும் சிவந்தன் கோபி உரையாற்றுகையில், ஈழத்தமிழர்கள் விடுதலை பெறும் வரை தான் தொடர்ந்து இது போன்ற போராட்டங்களில் கலந்துகொள்ள இருப்பதாகவும், மாவீரர் கனவுகளை நிறைவேற்றுவதன் மூலமே தமது பிள்ளைகளை போராட்டத்தில் பறிகொடுத்த பெற்றோரை ஆறுதல்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

இரவு 8.21க்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். எதிர் வரும் ஆகஸ்ட் திங்கள் 12ம் தேதி வரை அவரது தொடர் உண்ணாநிலைப் போராட்டம் தொடரும். லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு திடலுக்கு அருகில் போராட்டம் தொடரவிருப்பதால், அங்கு கூடவிருக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சிறுதும் அய்யமில்லை.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum