தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருந்து விலை உயர்த்த கூடாது! உச்ச நீதிமன்றம் ஆணை

Go down

மருந்து விலை உயர்த்த கூடாது! உச்ச நீதிமன்றம் ஆணை Empty மருந்து விலை உயர்த்த கூடாது! உச்ச நீதிமன்றம் ஆணை

Post  amma Fri Apr 05, 2013 12:48 pm

அவசியமான, அடிப்படையான மருந்துகள் விலை இனியும் உயராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. டில்லியை சேர்ந்த அகில இந்திய மருந்து செயல்பாட்டு நெட்வொர்க் என்ற அமைப்பு (அய்டான்), சமூக நல குழுக்கள் ஆதரவுடன் உச்ச நீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு ஒரு பொது நல மனு தாக்கல் செய்தது. ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி அவசியமான, அடிப்படையான மருந்துகள் விலை உயர்வை தடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தேசிய மருந்து விலை கொள்கை 2011 நடுவண் அரசு இப்போது தயாரித்துள்ளது. அது நடைமுறைக்கு வந்தால் மருந்துகள் விலை மேலும் உயரும் என்று உச்ச நீதிமன்றத்தில் அய்டான் மனு தாக்கல் செய்தது. அதன் மீது நடந்த விசாரணையில் நீதிபதிகள் அளித்த ஆணையில் கூறியதாவது:

அவசியமான, அடிப்படையான மருந்துகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து புதிய கொள்கை என்ற பெயரில் விலை உயர வழி செய்யக் கூடாது. ஏற்கனவே நம்நாட்டில் மருந்துகள் விலை மற்றும் பரிசோதனைக்கூட கட்டணங்கள் அதிகமாக இருக்கிறது. அவை மேலும் அதிகரிக்காமல் அரசு தடுக்க வேண்டும்.

ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் இல்லாமல் போனால் ஏழைகள், நடுத்தர மக்களில் 10 விழுக்காட்டினர் இறக்க நேரிடும். இயந்திர வாழ்க் கைக்கு மாறி விட்டோம். மருந்து செலவை அலுவலகத்தில் திரும்பப் பெறும் சலுகை பெற்றவர்கள் மருத்துவர் எழுதி தரும் அதிக விலை மருந்தை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், ஏழை களை பற்றி நினைத்து பார்க்க வேண்டும்.

- இவ்வாறு நீதிபதிகள் தங்களது ஆணையில் தெரிவித்தனர். பிறகு விசாரணையை ஜனவரி 2012க்கு ஒத்தி வைத்தனர்.

*புதிய சட்டத்தின் கீழ் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 348 மருந்துகள் விலை கட்டுப் பாட்டில் வரும்.

*இப்போது வெறும் 74 மருந்துகள் மட்டுமே அரசின் விலை கட்டுப் பாட்டில் உள்ளன.

*புதிய சட்டம் குறித்து 3 மாதங்களில் ஆராய்ந்து பதில் அளிக்க மத்திய அரசு அவகாசம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மருந்து விலை உயர்த்த கூடாது! உச்ச நீதிமன்றம் ஆணை
» பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சலுகை காட்ட தேவையில்லை! உச்ச நீதிமன்றம்
» லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது!- குமுதத்துக்கு நீதிமன்றம் உத்தரவு.
» லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது!- குமுதத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
» தியேட்டர் அதிபர்கள் அவசர ஆலோசனை: சினிமா கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum