தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தியேட்டர் அதிபர்கள் அவசர ஆலோசனை: சினிமா கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

Go down

தியேட்டர் அதிபர்கள் அவசர ஆலோசனை: சினிமா கட்டணத்தை உயர்த்த கோரிக்கை Empty தியேட்டர் அதிபர்கள் அவசர ஆலோசனை: சினிமா கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

Post  ishwarya Sat Apr 13, 2013 5:18 pm

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர், பொருளாளர் டாக்டர் ஹரி கோவிந்த் மற்றும் 65 திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கேளிக்கை வரியை சற்று குறைத்தோ அல்லது தற்போது உள்ள அளவிலேயே குறைத்து கொடுக்க வேண்டுமாய் அரசை பணிவுடன் வேண்டுகிறோம்.

8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணங்களை அனைத்து விலைவாசி உயர்வையும் கருத்தில் கொண்டு சீரமைத்து தர வேண்டும் என்று தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற துறைகளில் உள்ளது போல் நுழைவு கட்டணத்துடன் கேளிக்கை வரியை தனியாக சேர்த்து வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இந்த முடிவுகள் தொடர்பாக இன்று மாலை பிலிம் சேம்பரில் திரையுலகினரின் மற்ற பிரிவுனருடன் கலந்து பேசி விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு தர்மானஙக்ள் நிறைவேற்றப்பட்டன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி!
» விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவையில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்
» ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை – விரைவில் அரசியல்?
» பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum