பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சலுகை காட்ட தேவையில்லை! உச்ச நீதிமன்றம்
Page 1 of 1

பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு சலுகை காட்ட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்விதம் சலுகை காட்டப்பட்டால் தகுதி வாய்ந்த சிறந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒடிசா மாநில அரசு பணியில் உள்ள மருத்துவர்கள், முதுகலை படிப்பில் சேர்வதற்கு சலுகை அளிக்கப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதி மன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே பணிபுரியும் மருத்துவர்கள் முதுகலைப் படிப்பு மேற்கொள்ள ஒதுக்கீடு உள்ளது. இது தவிர பொதுப் பிரிவில் அவர்கள் விரும்பினால் போட்டியிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனால் பணியில் உள்ள மருத்துவர்கள் பொதுப் பிரிவில் பிற மாணவர்களுடன் மதிப்பெண் அடிப்படையிலான போட்டியிட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
முதுகலை மருத்துவத்துக்கு 87 இடங்கள் ஏற்கெனவே பணிபுரியும் மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, கூடுதலாக 86 இடங்கள் ஒதுக்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்திருந்தது. இது முதுகலை மாணவர் சேர்க்கை விதிமுறை 11(2) -க்கு எதிரானது என்று கருத்து மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கிராமப்பகுதிகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு சிறப்பு சலுகை அளிப்பதென்ற முடிவு வரவேற்கத்தக்கது. இத்தகைய மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் பணியை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்டுள்ளது. ஆனால் பொதுப்பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் சிறப்பு சலுகை காட்ட வேண்டியதில்லை.
ஏனெனில் இவர்களுக்கு தனியாக சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மருந்து விலை உயர்த்த கூடாது! உச்ச நீதிமன்றம் ஆணை

» படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
» சுந்தர்.சி-க்கு மட்டும் ஏன் கவர்ச்சி சலுகை! சொல்கிறார் அஞ்சலி
» பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum