தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உணவுக்கட்டுப்பாட்டு ஆலோகர் படிப்புக்கு நல்ல வாய்ப்பு!

Go down

உணவுக்கட்டுப்பாட்டு ஆலோகர் படிப்புக்கு நல்ல வாய்ப்பு! Empty உணவுக்கட்டுப்பாட்டு ஆலோகர் படிப்புக்கு நல்ல வாய்ப்பு!

Post  amma Fri Apr 05, 2013 12:33 pm

விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப நாளுக்கு ஒரு நோய் மனிதர்களை தாக்குகிறது. பெரும்பாலான நோய்களுக்கு முறையற்ற உணவுப்பழக்கங்களே அடிப்படையாக இருப்பது மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு ஆளாகிறோம். நமது உடல்நிலை, நோய் பாதிப்புக்கு ஏற்ற உணவுகள் குறித்து ஆலோசனை வழங்குவதுதான் டயட்டீஷியன் எனப்படும் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகரின் பணி. உலகஅளவில் டயட்டீஷியன்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஊதியத்தை கொட்டிக்கொடுத்து டயட்டீஷியன்களை பணியமர்த்த ஏராளமான மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

உடல் உழைப்புக்கு ஏற்ப தேவைப்படும் கலோரி அளவு, அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை அறிவுறுத்துவதுதான் இந்த பணியின் தன்மை.தற்போதைய வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவரை சந்திக்கும் போது, டயட்டீஷியனை சந்திக்க அறிவுறுத்துகின்றனர். டயட்டீஷியன் ஆக விரும்புவோர், உடலியல் மற்றும் உயிரியலில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். உணவு மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் நல்ல ஆலோசகராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பை முடித்தவர்கள் ஹெல்த் பிட்னஸ் மய்யங்கள், அழகு நிலையங்கள், மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற முடியும். விளையாட்டுக்குழு, தனி நபர்களுக்கும் ஆலோசகராக செயல்பட முடியும். தனி கிளினிக் வைத்து நடத்தவும் முடியும். பிளஸ் 2 முடித்த பின் சேரக் கூடிய ஹோம் சயின்ஸ் படிப்புகளிலும் எம்.எஸ்சி., படிப்பிலும் உணவியல் மற்றும் உணவூட்டம் சிறப்புப் பாடமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன் நுண்ணூட்டவியலுக்கான தனிப் பட்டயப் படிப்புகளும் உள்ளன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» உணவுக்கட்டுப்பாட்டு ஆலோகர் படிப்புக்கு நல்ல வாய்ப்பு!
» நல்ல வாய்ப்பு கொடுங்கள்.. எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறேன்! – வர்ஷா
» ஆதரவற்ற குழந்தைகள் படிப்புக்கு உதவும் காஜல்.
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
» நல்ல நல்ல அறிவுக் கதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum