25ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் : பெப்சி கோரிக்கை…!
Page 1 of 1

சினிமா
தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில்
புதிய தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்க போவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்து
இருப்பது பெப்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக
அரசு தலையீட்டு ஒரு நல்ல முடிவு எடுத்து 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வை
காப்பாற்ற வேண்டும் என்று பெப்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பெப்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது, பெப்சி தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம்
ஏற்படுத்துவதற்கு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தயாரிப்பாளர் சங்கத்தில்
நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாததால்,
தயாரிப்பாளர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிலிம் சேம்பரில்
பேச்சுவார்த்தை நடந்தது. அங்கும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து
தொழிலாளர் நல ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்கத்தினரே முறையிட்டனர்.
தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில்
சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் பெற்றுக் கொண்டு,
ஊதிய உயர்வு பேசும்போது மட்டும் முறையான ஒத்துழைப்பு அளிக்காமல்
புறக்கணித்து வந்தனர். இருப்பினும் 15 சங்கங்களின் பேச்சுவார்த்தை முடிந்த
நிலையில், எஞ்சியுள்ள சில சங்கங்களின் பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருக்கும்போதே, இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை எப்படியாவது
முறித்துக் கொள்ள வேண்டும் என்று பல காலக்கட்டங்களில் வெளிநடப்பு
செய்தனர்.
தற்போது அவர்களுக்குள் இருக்கும் கோஷ்டிபூசலை மறைப்பதற்கு எதாவது ஒரு
காரணத்தை காட்டி தொழிலாளர்கள் நல ஆணையத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த
முத்தரப்பு பேச்சுவார்த்தையை புறக்கணித்து முட்டுக்கட்டையிடுகின்றனர்.
மேலும் பெப்சியை உடைப்போம் என்றும், புதிய சங்கம் அமைப்போம் என்றும்
தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தொழிலாளர் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை
நடந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் இதுபோன்ற செயல்கள் செய்வது
தொழிலாளர் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிரான செயலாகும்.
வருகிற 3ம் தேதி தொழிலாளர் நல ஆணையத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை
நடைபெற இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளாவிட்டால்
அன்றைய தினமே எங்கள் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு படப்டிப்புகள்
அனைத்து நிறுத்தப்படும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். எனவே இந்த
பிரச்னையில், தமிழக அரசு தலையிட்டு எங்களின் 25 ஆயிரம் தொழிலாளர்களின்
வாழ்வை மீட்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும்
புதிய சங்கம் அமைக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் சில
தயாரிப்பாளர்களே எதிர்க்கும் நிலையில், புதிய அமைப்பை உருவாக்க
கட்டாயப்படுத்தும் தயாரிப்பாளர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதை தவிர்க்க: அமீர் கோரிக்கை
» 25 லட்ச ரூபாய் ! : திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» விஜய் தந்தை பட யூனிட்டுக்கு தமிழக அரசு ‘ஃபைன்’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum