தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காப்பதற்கு 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி சட்டசபையில் அமைச்சர் தகவல்

Go down

விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காப்பதற்கு 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி சட்டசபையில் அமைச்சர் தகவல் Empty விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காப்பதற்கு 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி சட்டசபையில் அமைச்சர் தகவல்

Post  amma Thu Apr 04, 2013 6:28 pm



மனித–விலங்குகள் மோதலை தவிர்க்க 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகள் வருவதை முன்கூட்டியே கண்டறிய கருவிகள் பொருத்தும் பணி நடப்பதாகவும் சட்டசபையில் வனத்துறை அமைச்சர் கூறினார்.

மனித–விலங்குகள் மோதல்

வால்பாறையில் வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து மனித உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் எம்.ஆறுமும் நேற்று கொண்டு வந்தார்.இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் பேசியதாவது:–ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரகம் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் காட்டுயானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், கரடிகள் அதிகமாக உள்ளது. இவைகள் உணவுத்தேவைகளுக்காக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மனிதர்களுக்கும், வன உயிரினங்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகிறது.

விலங்குகள் தாக்கி 5 பேர் சாவு

2012–ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ம் ஆண்டு மார்ச் வரை யானை, கடமான், காட்டெருமை ஆகியவைகள் தாக்கி 5 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். வனவிலங்குகளின் தாக்குதலை தவிர்க்க வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகள் குறித்து அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர். இதுதவிர கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

*வனவிலங்குகளால் மனித உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க 2 மினி வாகனங்கள் மூலம் நடமாடும் உயிரினங்களை கண்காணிக்கப்படுகிறது.

183 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி

*ஆதிவாதி இளைஞர்களை தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் வன உயிரினங்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் விலங்குகளை வனத்திற்குள் விரட்டுவது, பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது போன்ற பணிகள் செய்கின்றனர். இதனால் உயிரிழப்பு, பொருட்சேதம் குறைந்துள்ளது.

*மனித–வன உயிரின மோதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகேயுள்ள காப்புக்காடுகளில் ரூ.2 கோடியை 25 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 130 கிலோ மீட்டர் தூரத்துக்கு சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 53.80 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலியினை ரூ.6 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரூ.83 லட்சத்துக்கு 40 கிலோ மீட்டருக்கு யானை புகா அகழி அமைப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டிருந்து யானை புகா அகழியை ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் செலவில் பராமரிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளை கண்டறியும் கருவிகள்

*வன உயிரினங்களின் நடமாட்டம் உள்ளதை முன்கூட்டியே கண்டறியக்கூடிய தொழில்நுட்ப கருவி 30 இடங்களில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆசிய யானைகள் திட்டத்தின் கீழ் 2011–12–ம் நிதியாண்டில் தமிழக அரசு ரூ.2.22 கோடி ஒதுக்கியது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களினால் மனித–வன உயிரின மோதல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு
»  தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
»  அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு
» இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட விட்டமின்-சி சிறந்த மருந்து.- ஆய்வில் தகவல்
» கோடையில் மின்சார பற்றாக்குறையை போக்க வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க போர்க்கால நடவடிக்கை மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum