தமிழக எல்லையான பாலாறு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டை தடுப்பணை கர்நாடக அரசு மீண்டும் அடாவடி
Page 1 of 1
தமிழக எல்லையான பாலாறு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டை தடுப்பணை கர்நாடக அரசு மீண்டும் அடாவடி
தமிழக எல்லையான பாலாறு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மணல் மூட்டை தடுப்பணை அமைத்து உள்ளது. கர்நாடக அரசின் இந்த அடாவடித்தனம் தடுத்து நிறுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மாதேஸ்வரன் மலை குடிநீர் திட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதேஸ்வரன் மலை குடிநீர் திட்டத்திற்காக தமிழக எல்லையான பாலாறு அருகே கர்நாடக அரசு பிரமாண்டமான நீர் உந்து நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது காவிரி ஆற்றை குறுக்கிட்டு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.இதன்மூலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் போக்கை மாற்றி, தடுப்பு ஏற்படுத்தி மாதேஸ்வரன் மலை குடிநீர் திட்டத்திற்கு குடிநீரை எடுக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு உள்ளது.
மண் தடுப்பணை
ஏற்கனவே இந்த பகுதியில் காவிரியாற்றை குறுக்கிட்டு மண் தடுப்பணை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டது. அப்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் மூலம் அந்த முயற்சி உடனடியாக தடுக்கப்பட்டது.தற்போது கர்நாடக அரசு மீண்டும் ஸ்ரீ மாதேஸ்வரன் மலை குடிநீர் திட்ட நீர் உந்து நிலையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மணல்மூட்டை தடுப்பணை அமைத்து உள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு மிகவும் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. எனவே இந்த புதிய மணல்மூட்டை தடுப்பணை மூலம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே கர்நாடக அரசின் இந்த அடாவடித்தனத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» காவிரி: நிபுணர் குழு அறிக்கையை தமிழக அரசு நிராகரிப்பு
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum