காவிரி: நிபுணர் குழு அறிக்கையை தமிழக அரசு நிராகரிப்பு
Page 1 of 1

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள சம்பா
பயிரைக் காப்பாற்றவென கர்நாடகம் 2.44 டி எம் சி நீரைத் திறந்துவிடவேண்டுமென
உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்க தமிழக அரசு
மறுத்துவிட்டது.
எனினும் குழுவின் பரிந்துரையை ஏற்று,
தமிழகத்துக்கு 2.44 டி எம் சி நீரைத் திறந்துவிட இந்திய உச்சநீதிமன்றம்
இன்று(7.2.13) உத்தரவிட்டது.
தொடர்புடைய பக்கங்கள்
கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற
காவிரியில் கர்நாடகம் 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடவேண்டுமெனக் கோரி,
தமிழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் கர்நாடகமோ, தங்களது அணைகளில் குடிநீருக்கு
மட்டுமே தண்ணீர் இருப்பதால், தமிழகம் கோரும் தண்ணீரை திறந்து விட இயலாது என
மறுத்து விட்டது.
நிபுணர் குழு
அதனையடுத்து உச்சநீதிமன்றம் மத்திய நீர்வள ஆணைய
அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரின் அளவு குறித்து
அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அந்நிபுணர் குழு தமிழக டெல்டா பகுதிகளைப்
பார்வையிட்டு, ஏறத்தாழ 50 சத நிலப்பரப்பில் அறுவடை முடிந்துவிட்டது, மேலும்
40 சதப் பரப்பில் அறுவடை நடந்துகொண்டிருக்கிறது.
ஆக எஞ்சியுள்ள பத்து சதப் பரப்பில், அதாவது ஒரு
லட்சம் ஏக்கர் அளவு நிலங்களுக்குத்தான் இப்போது பாசனம் தேவை. எனவே
கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 2.74 டிஎம்சி நீரைத் திறந்துவிட்டாலே
அத்தேவையினை நிறைவுசெய்துவிடலாம் எனத் தெரிவித்திருக்கிறது.
நீதிமன்றம் உத்தரவு
அவ்வறிக்கையினை ஒட்டியே வியாழனன்று உச்சநீதிமன்ற
நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் கர்நாடகத்திற்கு ஆணை
பிறப்பித்தது.
ஆனால் தமிழகம் 2.44 டிஎம்சி நீர்
திறந்துவிடப்படவேண்டுமென்ற ஆணையினை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 டி எம் சி
கேட்டு மனு தாக்கல் செய்திருந்தும், விவாதங்களின்போது 6 லட்சம் ஹெக்டேர்
நிலங்களில் வளர்க்கப்பட்டுள்ள பயிர்களுக்கு 9 டி எம் சி நீர் போதும் என்ற
அளவில் தனது கோரிக்கையினைக் குறைத்துக்கொண்ட தமிழகம், இப்போது ஒரேயடியாக
2.44 டி.எம்.சி எனக் குறைக்கும் ஆணையினை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்து
உங்கள் விருப்பத்திற்கேற்ப உத்திரவிடமுடியாது எனக் கூறி தமிழக
ஆட்சேபணையினை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஒரே நாளில் பத்து சத நிலப்பரப்பை
மட்டும் பார்வையிட்டுவிட்டு செய்யப்படும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல
என வாதிட்டு, உச்சநீதிமன்ற ஆணையினை எதிர்த்து, மேலும் ஒரு மனு தமிழக அரசு
சார்பாகத் தாக்கல் செய்யப்படுகிறது என செய்திகள் கூறுகின்றன.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்
மாநிலச் செயலர் தா பாண்டியன் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், 2.44
டி.எம்.சி தண்ணீர் போதுமானது அல்ல என்ற போதிலும், உச்சநீதிமன்ற ஆணை ஆறுதல்
தருவதாகவும் அத்தீர்ப்பினை ஏற்று நிறைவேற்ற கர்நாடக அரசு மறுத்தாலும்,
காலதாமதம் செய்ய முற்பட்டாலும், மத்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி
காவிரித் தண்ணீரை திறந்துவிடமெனக் கோரியிருக்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum