இந்தியிலும் சொந்தக் குரலில் பாடிய ரஜினி!
Page 1 of 1

ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறார் போலிருக்கிறது சூப்பர் ஸ்டார். கோச்சடையான் படத்தில், இதுவரை இருந்த அத்தனை வழக்கங்களுக்கும் மாறான பல விஷயங்களை தானே முன்வந்து செய்து வருகிறார் அவர்.
மன்னனுக்குப் பிறகு எத்தனையோ படங்களில் பாடக் கேட்டும் புன்னகையோடு மறுத்துவிட்ட அவர், இப்போது கோச்சடையானில் பாடினார். முதலில் தமிழில் பாடியவர், அடுத்து இந்தியிலும் அந்தப் பாட்டைப் பாடியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்ய செய்தி.
காரணம், தமிழில் தயாராகி, இந்தியில் டப் செய்யப்படும் தன் முந்தைய படங்களுக்கு குரல் கொடுப்பதைக் கூடத் தவிர்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் இந்தப் பாடலை பாலிவுட்டில் இப்போதைய பிஸியான பாடலாசிரியர் இர்ஷாத் காமில் (லவ் ஆஜ்கல், ராக்ஸ்டார் பட பாடல்களை எழுதியவர்) எழுத, ஏஆர் ரஹ்மான் இசையில் ரஜினி பாடினார்.
“இதுவும் தத்துவப் பாடல்தான் என்றாலும் தமிழ்ப் பாடலுக்கும் இந்த இந்திப் பாடலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். தமிழ் பாடலின் இந்தி வடிவமாக இல்லாமல், இர்ஷாத் காமில் அவரது சொந்த கற்பனை வரிகளை இதில் எழுதியுள்ளார். ரஜினி சிறப்பாகப் பாடியுள்ளார்,” என்கிறார் படத்தின் தயாரபிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்.
ஆரம்பத்தில் இந்திப் பாடலை வேறு யாரையாவது வைத்து பாடவைக்கலாம் என்றுதான் ரஜினியே கூறினாராம். காரணம், அதில் இடம்பெற்றிருந்த கடினமான உருது வார்த்தைகள். வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லும் பாடல் என்பதால், மிகவும் இலக்கியத்தரம் வாய்ந்ததாக அந்த வரிகள் அமைக்கப்பட்டிருந்ததாம். பின்னர் ஒரு முறை படித்துப் பார்த்த பிறகு, ஒரே டேக்கில் பாடிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா
» மன்மதன் ‘மாஜிக்’-சொந்தக் குரலில் திரிஷா!
» தெலுங்கு மாற்றான் - சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum