மெட்ரோ ரயில் திட்டம்: திருவொற்றியூர் வரை நீட்டிக்கக் கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

திருவொற்றியூர், ஜூலை 2: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர பா.ஜ.க. சார்பில், மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை செüந்தரராஜன் தலைமை வகித்து பேசியதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூரிலிருந்துதான் தொடங்குவதாகக் கூறினார்கள். ஆனால் பிறகு திருவொற்றியூர் புறக்கணிக்கப்பட்டு தங்க சாலையிலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வட சென்னை மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். உடனே இத்திட்டம் திருவொற்றியூர் வரை நீட்டிக்கப்படும். இதற்கான பூர்வாங்கப் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் திருவொற்றியூர் வரையில் நீட்டிப்பது குறித்து எவ்வித ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ செய்யப்படவில்லை.
மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிக்கும்வரை போராட்டம் தொடரும்.
திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலத் திட்டம் சுமார் 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனால் மணலி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேம்பாலம், மெட்ரோ ரயில், பேருந்து வசதிகள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வட சென்னை பகுதியை புறக்கணித்தே வருகின்றன என்பதுதான் உண்மை. எனவே வஞ்சிக்கப்படும் வட சென்னை மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜானகிராமன், விவசாயி அணித் தலைவர் எம்.பாஸ்கர், நகரத் தலைவர் வெங்கடகிருஷ்ணன், செயலாளர் த. ஜெய்கணேஷ், மாநில மீனவர் அணி துணைத் தலைவர் சி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேலம்-கரூர் அகலப்பாதை : 10 நாளில் ரயில் சேவை தொடங்க திட்டம்
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்

» சரப்ஜித் சிங்கை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் அரசிடம் மனு கொடுக்க சல்மான் திட்டம்
» மெட்ரோ பட்டாம்பூச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum