பாலியல் வன்கொடுமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் ‘கற்பழிப்பு குற்றவாளி மீண்டும் கற்பழித்தால் மரண தண்டனை’
Page 1 of 1
பாலியல் வன்கொடுமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் ‘கற்பழிப்பு குற்றவாளி மீண்டும் கற்பழித்தால் மரண தண்டனை’
கற்பழிப்பு குற்றவாளி மீண்டும் கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கப்படும். இது தொடர்பான குற்றவியல் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து உடனடியாக அமலுக்கு வந்தது.
அவசர சட்டம்
நாட்டின் தலைநகரான டெல்லியில் மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி தனது நண்பருடன் பயணம் செய்தபோது, 6 காமுகர்களால் கற்பழித்து சிதைக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம், நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.இதையடுத்து பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறை குற்றங்களுக்கு விதிக்கப்படுகிற தண்டனையை அதிகரித்து சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதில் பிப்ரவரி மாதம் 3–ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவசர சட்டம் ஒன்றை பிரகடனம் செய்தார்.
ஜனாதிபதி ஒப்புதல்
இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் மார்ச் 19–ந் தேதியும், டெல்லி மேல்–சபையில் மார்ச் 21–ந் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் (ஏப்ரல் 2–ந் தேதி) ஒப்புதல் அளித்தார். எனினும் இதுதொடர்பான தகவல் நேற்றுதான் வெளியிடப்பட்டது. இது இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குழந்தைகள் பாலுறவு குற்ற தடுப்பு சட்டம் ஆகியவற்றில் தேவையான பிரிவுகளில் திருத்தங்களுக்கு வழிவகை செய்துள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய சட்ட திருத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மரண தண்டனை
இதன் முக்கிய அம்சங்கள்:–
* கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த தண்டனையை குற்றவாளியின் ஆயுட்காலம் வரை நீட்டிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* ஏற்கனவே கற்பழிப்பு வழக்குகளில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அந்த நபருக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்க முடியும்.
புதிய சட்டப்பிரிவுகள்
* பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தல், எதிர்பாலினத்தவரின் அந்தரங்க உறுப்பு, செயல்களைப் பார்த்து இன்புறுதல் போன்ற குற்றங்களை இரண்டாவது முறையாக செய்தால் அதை ஜாமீனில் விட முடியாத குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படும்.
* பெண்கள் மீது திராவகம் வீசி தாக்கினால் 10 ஆண்டு ஜெயில்.
* பாலுறவு சம்மத வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாக்டருக்கு தண்டனை
* பாலியல் வன்முறைக்கு ஆளாகிற பெண்களுக்கு அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உடனடியாக முதலுதவி, சிகிச்சையை இலவசமாக அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அப்படி சிகிச்சை அளிக்க மறுத்தால் சம்பந்தப்பட்ட டாக்டருக்கு தண்டனை வழங்கப்படும்.
* பாலியல் வன்முறை குற்றத்தில் ஈடுபடுகிற குற்றவாளிகள் போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், ஆஸ்பத்திரி ஊழியர்கள், என்கிறபோது, அவர்களுக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டுகளும், அதிகபட்சம் வாழ்நாள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
* கற்பழிக்கப்பட்ட பெண் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மனநல பாதிப்பு, உடல் நல பாதிப்பு அடைகிறபோது, அவர் மாஜிஸ்திரேட்டு முன்பாக உதவியாளர் அல்லது சிறப்பு பயிற்சி பெற்றவர் உதவியுடன் வாக்குமூலம் அழிக்க வகை செய்து இந்திய சாட்சிய சட்டம் திருத்தப்படுகிறது. அதை வீடியோ படமாக எடுக்கவும் முடியும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம் பதிவு!
» SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
» சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிக்கு கேளிக்கை வரி: சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்
» மீண்டும் பிரீத்தி கற்பழிப்பு வழக்கு… கைதாவாரா மதுர் பண்டார்கர்?
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
» SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
» சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிக்கு கேளிக்கை வரி: சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்
» மீண்டும் பிரீத்தி கற்பழிப்பு வழக்கு… கைதாவாரா மதுர் பண்டார்கர்?
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum