தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய சகோதரர்களுக்கு உயர் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி வழங்கினார்

Go down

 இந்திய சகோதரர்களுக்கு உயர் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி வழங்கினார்  Empty இந்திய சகோதரர்களுக்கு உயர் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி வழங்கினார்

Post  amma Thu Apr 04, 2013 5:08 pm

வாஷிங்டன்,

இந்தியாவின் தலைநகர் டெல்லியை சேர்ந்தவர்கள் ரவி, ரிஷி, நிஷி. இவர்கள் காந்த் சகோதரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஷக்தி வாஹினி என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை 2001–ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்க தீவிரமாக உழைத்து வருகிறார்கள். இதைக் கவுரவித்து அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தொடங்கிய விட்டல் வாய்சஸ் அமைப்பு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

வாஷிங்டனில் பிரசித்தி பெற்ற கென்னடி சென்டரில் நடந்த கண்கவர் விழாவில் காந்த் சகோதரர்களுக்கு சாலிடாரிட்டி விருது என்னும் இந்த விருதை துணை ஜனாதிபதி ஜோ பிடன் வழங்கி சிறப்பித்தார்.

இதே போன்று பெண் கல்விக்கு ஆதரவாக தீவிர குரல் கொடுத்து, தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான பாகிஸ்தான் மாணவி மலாலாவுக்கு இதே விட்டல் வாய்சஸ் அமைப்பு குளோபல் டிரையல்பிளேசர் விருது வழங்கி சிறப்பித்தது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிறுதொழில்களுக்கு அதிக கடன் உதவி: இந்தியன் வங்கிக்கு தேசிய விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
» தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்
» அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி!
» அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி!
» பாலாவுக்கு தேசிய விருது – பிரதீபா வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum