தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாக்கியம் தரும் பஞ்சலிங்க தரிசனம்

Go down

பாக்கியம் தரும் பஞ்சலிங்க தரிசனம் Empty பாக்கியம் தரும் பஞ்சலிங்க தரிசனம்

Post  amma Fri Jan 11, 2013 1:52 pm

மைசூரிலிருந்து 48வது கிலோ மீட்டரில் தலக்காடு உள்ளது. பாலைவனம். மணல்
குன்றுகள் என வித்தியாசமாய் காட்சி தரும் தலக்காட்டுக்கு ஒரு பின்னணி
உண்டு. தல, காட என இரு வேடர்கள் இந்தப் பகுதியில் வசித்து வந்தனர். அந்தப்
பகுதியில் ஒரு குளம் இருந்தது. அதிலிருந்து தினமும் ஒரு யானைதும்
பிக்கையில் நீர் எடுத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் ஊற்றி, மலர்களை
பறித்து தூவுவதையும் பார்த்து அதிசயித்து, யானை இல்லாத நேரத்தில் அந்த
இடத்தை நோட்டம் விட்டனர். அங்கு ஒரு சால்பரீமரம் இருந்துள்ளது. அதனை வெட்ட
கோடாரியை ஓங்கியபோது, அருகில் இருந்த கல்லின் மீது பட, அதன்
ஒரு பகுதி தெறித்துவிழ, உடனே அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அது பூமியை தொட்டதும் பாலாக மாறிவிட்டதாம்.

இதனைக்
கண்ட வேடர்கள் மயக்கமுற்று விழுந்தனராம். அப்போது ஒரு அசரிரீ கேட்டதாம்:
‘‘அருகிலுள்ள சால்பரீ மரத்தின் பழத்தை அறுத்து, அந்தக் கல்லில் தடவுங்கள்.
உடைந்த ஒரு பகுதி பழையபடி ஆகிவிடும். அதோடு, கீழே சிந்தியுள்ள பாலை எடுத்து
அருந்தினால் உங்கள் பிறவிப் பயன் நிறைவேறி கைலாசம் செல்வீர்’’. உடனே
சால்பரீ மர பழத்தை அறுத்து அந்தக் கல்லின் மீது பூசியதும் கல் முழுமை
பெற்று விட்டதாம். அப்போது தான் வேடர்கள்
அதனைக் கூர்ந்து
கவனித்தனராம். அது சிவலிங்கம் என புரிந்ததாம். இந்த வேடர்கள் நினைவாக
ஊருக்கு தலக்காடு என பெயர் ஏற் பட்டதாம். தன்னுடைய காயத்திற்கு, தானே
மருந்து கூறி குணப்படுத்திக் கொண்டதால் அந்த சிவனுக்கு வைத்தீஸ்வரன் எனப்
பெயரிட்டு, தற்போது வைத்தியநாத சுவாமி என அழைக்கின்றனர்.

இந்த இடம்
ஏன் பாலைவனம் போலவும் மணல் குன்றுகளுடனும் காட்சியளிக்கிறது? இதற்கும் ஒரு
கதை உண்டு. இந்தப் பகுதியை ஸ்ரீரங்கராயர் என்பவர் ஆண்டு வந்தார். அவருக்கு
அலமேலு அம்மா, ரங்கம்மா என இரு மனைவியர். ஒரு சமயம் அவருக்கு முது கில்
பிளவை நோய் வந்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆட்சியை அன்றைய
மைசூர் மன்னர் ராஜ உடையாரிடம் ஒப்படைத்துவிட்டு, மாலங்கி என்ற இடத்தில்
நிரந்தரமாய் தங்கி விட்டார். அந்தப் பகுதி அம்மனுக்கு செவ்வாய், வெள்ளியில்
ராணியின் நகைகளை அணிவிப்பது வழக் கம். ஸ்ரீரங்கராயர் மாலங்கி சென்றபோது
அவருடைய மனைவி ரங்கம்மா அந்த நகைகளை தன்னுடையது என எடுத்துச் சென்று
விட்டார்.

விவரம் அறிந்து அவற்றை அம்மனுக்கு அணிவிக்க மைசூர் ராஜா
கேட்டபோது தர மறுத்தார். ராஜா நகைகளை பலவந்தமாய் பிடுங்கிவரக் கூறியபோது,
ராணி மைசூர் ராஜ வம்சத்துக்கும் ஊருக்கும் சாபம் கொடுத்தார்: தலக்காடு
பாலைவனமாய் மண்மூடி போக வேண்டும். ராஜா வம்சத்தில் குழந்தை பாக்கியம்
இல்லாமல் போகட்டும். தலக்காடு பாலைவனம் போல்தான் காட்சியளித்தது. கோயில்கள்
மண்மூடி கிடந்தன. 1911ல்தான் புதை பொருள் ஆய்வாளர்கள் மூலம் சில
கோயில்கள் சுத்தம் செய்து வழிபாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மைசூர்
ராஜவம்சத்தில் அன்று முதல் இன்று வரை 29 பேர் ராஜாவாக இருந்துள்ளனர்.

இவர்களில்
வெகுசிலருக்கே குழந்தைகள் இருந்துள்ளன. தற்போதைய மைசூர் மன்னருக்கும்
குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பாலைவன
தோற்றத்துக்கும் மண் குன்றுகளுக்கும் வேறு சில காரணங்களும் கூறுகின்றனர்.
தலக்காட்டை, காவிரி பூமாலை போல சுற்றி ஓடு கிறது. இந்தக் காவிரியில்
வெள்ளம் வரும்போதெல்லாம் பெரும் மணல் அடித்து வரப்பட்டு இந்தப் பகுதியை
மண்மூடிவிட்டது எனவும் கூறுகின்றனர். தலக்காட்டில், ஒரு காலத்தில் சிவனை
யானைகள் பூஜித்ததால், கஜாரண்யம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. தலக்காடு
வைத்தியநாத சுவாமியின் முன் மண்டபத்தை கட்டியது தமிழன் ராஜேந்திர சோழன்.
இந்தக் கோயிலின் முன் வாயிலில் செய்யப்பட்டுள்ள சித்திர வேலைப்பாடுகள்
நின்று ரசிக்க வைக்கும். வாசலில் கம்பீரமான துவார பாலகர்களைக் காணலாம்.
வலப்புறத்தில் மூஞ்சூறு மீது அமர்ந்த வித்தியாசமான கணபதி.

மூஞ்சூறை
அதட்டி உருட்டி இயக்க ஏதுவாய் அவர் கையில் கடிவாளமும் உள்ளது!
கோயிலுக்குள் நடராஜர், துர்க்கை, பத்ரகாளி, காளிகாம்பாள் உட்பட பலர்
உள்ளனர். கருவறை நுழைவாயிலில் தமிழ்நாட்டு பாணியில் இருபுறமும் முருகனும்
கணபதியும் உள்ளனர். உள்ளே வைத்தியநாதரை, ஏழு தலை நாகத்துடன் கூடிய வெள்ளிக்
கவசத்துடன் காண பரவசம் ஏற்படும். தாயார் பெயர் மனோன்மணி. மே மாதத்தில்
வைத்தியநாத சுவாமி காட்சியளித்த தினம் கொண்டாடப்
படுகிறது. கார்த்திகை
சோமவாரம் ரொம்ப விசேஷம். பங்குனியில் பிரமோத்ஸவம், தீர்த்தவாரியும் உண்டு.
அருகில் இரு மண் மலைகளைக் கடந்து சென்றால்
பாதாளேஸ்வரர் ஆலயத்தைக்
காணலாம். இங்குள்ள சிவன் பெயர் வாசுகீஸ்வரர். இங்கும் விநாயகர், பைரவர்,
வீரபத்திரர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். மேற்கில்
சென்றால் மருளீஸ்வரர் கோயிலை அடையலாம்.

கருவறையில் பெரிய லிங்கம்
உள்ளது. பிரம்மா, தன் சாபம் நீங்குவதற்காக இந்த லிங்க த்தை பிரதிஷ்டை
செய்ததாக ஐதீகம். கிழக்கில் சென்றால் அர்க்கேஸ்வரரை தரிசிக்கலாம். இது
வைத்தியநாத சுவாமி கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவு. இது
தனியாக உள்ளது. வைத்தியநாத சுவாமி கோயிலிலிருந்து பார்த்தால்
முடுக்குத்துறை குன்று தெரியும். அதில் ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி கோயில்
உள்ளது. இங்கு பெரிய நந்தியை தரிசிக்கலாம். ஸ்ரீமல்லிகார்ஜுனர் சின்ன
லிங்கம். அதன்மீது காமதேனுவின் கால் பதிந்த தடயம் உள்ளதாக காட்டுகிறார்கள்.
இங்குள்ள தாயாரின் பெயர் பிரமராம்பிகை. தனிச்சந்நதி கொண்டுள்ளாள். இந்த
ஐந்து சுவாமிகளையும் ஒரே சமயத்தில் காண்பது பாக்கியம். வைத்தியநாத சுவாமி
கோயிலில் பகவான் பிரதிஷ்டைக்கு காரணமாக இருந்த இருவேடர்களும் சிலாரூபத்தில்
காட்சி தருகின்றனர். பாதாளேஸ்வரர் கோயிலைக் கடந்து சிறிது தூரம் நடந்தால்
கீர்த்தி நாராயணர் கோயில் உள்ளது. 1911ல்தான் இந்தக் கோயில் மண்ணிலிருந்து
அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணரப்பட்டது. இங்கு தாயார், நம்மாழ்வார்
சிலைகளும் உள்ளன. கருட பீடத்தில் 9 அடி உயர கம்பீர கீர்த்தி நாரா யணர்
காணப்பட வேண்டியவர். ராமானுஜரால் கட்டப்பட்ட ஐந்து நாராயணர் கோயில்களில்
இதுவும் ஒன்று. இந்த இடத்திற்கு நல்ல துணையுடன், பொழுது புலர்ந்த பின்பு
சென்று தரிசித்து பொழுது மறையும் முன் இருப்பிடம் திரும்புவது நல்லது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum