தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் வில்லனாகிறார் நாசர்…!

Go down

மீண்டும் வில்லனாகிறார் நாசர்…! Empty மீண்டும் வில்லனாகிறார் நாசர்…!

Post  ishwarya Thu Apr 04, 2013 1:47 pm

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும் வில்லன் மற்றும் குணச்சித்திர
நடிகர்களில் நாசரும் ஒருவர். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதை
கச்சிதமாக நடிக்கும் ஆற்றல் படைத்தவர். நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான
நடிகர்களில் நாசரும் ஒருவர். ஹீரோ, வில்லன், டைரக்ஷ்ன், தயாரிப்பு என
பல்வேறு பரிமாணங்களில் வலம் வந்த நாசர், இப்போது குணச்சித்திர வேடங்களில்
நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரம் ஏற்க
இருக்கிறார் நாசர். அதுவும் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரம். இந்தியில்
வெளியான சூப்பர் ஹிட் படமான டில்ல‌ி பெல்லி படத்தின் தமிழில் ரீ-மேக்கில்
தான் நாசர் வில்லனாக நடிக்க உள்ளார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில்
நடிக்க விஜய் ராஸ் மற்றும் நாசர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
கடைசியில் நாசர் அந்த இடத்தை தட்டி சென்றுவிட்டார். படத்தில் காமெடி
கலந்த‌ வில்லன் ரோல் என்பதால் அதற்கு நாசர் தான் பொருந்துவார் என்று
கருதிய டைரக்டர் அவரையே தேர்வு செய்துவிட்டார்.
டில்லி பெல்லி தமிழ் ரீ-மேக்கில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக
ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் படங்களின்
டைரக்டர் கண்ணன் இப்படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum