தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா – ஹன்ஸிகா ஜோடி!

Go down

சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா – ஹன்ஸிகா ஜோடி! Empty சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா – ஹன்ஸிகா ஜோடி!

Post  ishwarya Thu Apr 04, 2013 12:49 pm

சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள்.

சிங்கம் படத்தை இயக்கிய ஹரிதான் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

‘சிங்கம் 2′ படத்திற்கான அனைத்து திரைக்கதை பணிகளையும் முடித்து விட்டாராம் ஹரி. ‘மாற்றான்’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்து விட்டு ‘சிங்கம் 2′ படத்தில் நடிக்க கால்ஷீட் தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா.

‘சிங்கம்’ படத்தினை போலவே ‘சிங்கம்’ 2ம் பாகத்திற்கும் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவருடன் ஹன்சிகா, விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர், ரகுமான் மற்றும் பல புதிய கதாபாத்திரங்கள் இணைய இருக்கிறார்கள். சந்தானம் இப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சென்னை, ஹைதராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது. இயக்குனர் ஹரி முதன் முறையாக படத்தின் சில முக்கிய காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்குகிறார்.

‘சிங்கம்’ படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். ஒளிப்பதிவுக்கு ப்ரியன், படத்தொகுப்புக்கு V.T.விஜயன் , பாடல்களுக்கு நா,முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி, மக்கள் தொடர்பாளரா ஜான்சன், கலை இயக்குனராக கதிர் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் லக்ஷ்மணன் இப்படத்தினை தயாரிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum