தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை சுஜிபாலாவுக்கு அக்டோபரில் திருமணம்: புதுமுக டைரக்டரை மணக்கிறார்

Go down

நடிகை சுஜிபாலாவுக்கு அக்டோபரில் திருமணம்: புதுமுக டைரக்டரை மணக்கிறார் Empty நடிகை சுஜிபாலாவுக்கு அக்டோபரில் திருமணம்: புதுமுக டைரக்டரை மணக்கிறார்

Post  ishwarya Tue Apr 02, 2013 6:15 pm

‘அய்யா வழி‘, ‘கிச்சா வயசு 16‘, ‘முத்துக்கு முத்தாக‘, ‘கோரிப்பாளையம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. இவர் தற்போது ‘உண்மை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ரவிக்குமார் என்பவர் டைரக்டு செய்து அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

படப்பிடிப்பின் போது ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுஜிபாலாவை ரவிக்குமார் காதலித்தார். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சுஜிபாலாவின் பெற்றோரிடம் ரவிக்குமார் தெரிவித்தார். சுஜிபாலாவின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை நாகர்கோவில் கொய்யன் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் சுஜிபாலா – ரவிக்குமார் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகைகள் ஷகீலா, அல்போன்சா, கும்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுபற்றி சுஜிபாலாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தற்போது நான் ‘உண்மை’ என்ற படத்திலும், விஷாலுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். ‘உண்மை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது ரவிக்குமார் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

நான் எனது பெற்றோரின் சம்மதத்தை பெறுமாறு கூறினேன். அவரும் எனது பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். நேற்று எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும், அக்டோபர் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum