தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெருக்கமாக இருந்ததை வீடியோ படம் எடுத்து நடிகை டாப்சியை மகத் மிரட்டினாரா?: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

Go down

நெருக்கமாக இருந்ததை வீடியோ படம் எடுத்து நடிகை டாப்சியை மகத் மிரட்டினாரா?: போலீஸ் விசாரணையில் பரபரப்பு Empty நெருக்கமாக இருந்ததை வீடியோ படம் எடுத்து நடிகை டாப்சியை மகத் மிரட்டினாரா?: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

Post  ishwarya Tue Apr 02, 2013 5:22 pm

‘மங்கத்தா’ படத்தில் நடித்த மகத்தும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர்.

மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் மேற்கொண்டார். உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நடிகை டாப்சியால் இந்த தகராறு நடந்தாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன.

மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். மகத் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனோஜிடம் விசாரணை நடத்த தயாரானார்கள். ஆனால் மனோஜ் மலேசியா தப்பி விட்டார்.

இதற்கிடையில் விசாரணை தொடரவேண்டாம் என்று முக்கியஸ்தர்களிடம் இருந்து போலீசாருக்கு நெருக்கடிகளும் வந்தன. இருதரப்பிலும் சமரச முயற்சிகளும் நடந்தன. ஆனால் மனோஜ் தன்னை கைது செய்யலாம் என்று கருதி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் பற்றி விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போலீசாருக்கு ஏற்பட்டது. ரகசிய விசாரணையில் அவர்கள் இறங்கினர்.

அடிதடி நடந்ததை நேரில் பார்த்தவர்களை அடையாளம் கண்டு விசாரித்தார்கள். மனோஜ், மகத் நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டது. மனோஜ் தரப்பில் டாப்சியை மகத் மிரட்டியதால் இந்த அடிதடி நடந்ததென கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாப்சி தமிழ் படத்தில் அறிமுகமானபோது மகத் நெருக்கமாக இருந்தார். டாப்சி சென்னை வரும்போது விமான நிலையத்துக்கு சென்று இவர்தான் காரில் ஏற்றி வருவார். அப்போதைய பழக்கத்தை மகத் ரகசியமாக வீடியோ படம் எடுத்து வைத்திருந்ததாகவும், தற்போது நட்பை முறித்துக் கொண்டு மனோஜுடன் டாப்சி தொடர்பு வைத்ததால் ஆத்திரமாகி அந்த வீடியோ படங்களை காட்டி அவரை மிரட்டியதாகவும் மனோஜ் நண்பர்கள் போலீசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மகத்திடம் இதுபற்றி மனோஜ் கேட்டபோதுதான் வாய்த்தகராறு முற்றி அடிதடி என போனதாக கூறுகின்றனர். ஆனால் மகத் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது மறுத்தனர். தகராறுக்கு வேறு காரணம் என்றார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!
» ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்…!
» கமிஷனரிடம் வீடியோ ஆதராம் கொடுத்தார் சோனா: பரபரப்பு பேட்டி
» படம் எடுத்து தமிழ் வளர்ப்பேன் - இயக்குன‌ரின் சூளுரை
» எனது மார்புகளை அழுத்திப்பிடித்து படுக்கைக்கு அழைத்தார் சரன் : சோனா பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum