கமிஷனரிடம் வீடியோ ஆதராம் கொடுத்தார் சோனா: பரபரப்பு பேட்டி
Page 1 of 1

நடிகை சோனா சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து எஸ். பி. பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை கொடுத்தார்.
மங்காத்தா வெற்றி பெற்றதற்காக அதில் நடித்த வைபவ் மதுவிருந்து கொடுத்தார். அதில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி.பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து எஸ்பிபி சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்த சோனா தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார். அந்த ஆதாரத்தை பாண்டிபஜார் போலீசில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் வீடியோ ஆதாரத்தை பாண்டிபஜார் போலிசில் கொடுக்கவில்லை.
நேற்று பகல் 11. 30 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சோனா கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ கேசட் ஒன்றைக் கொடுத்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நான் ஒரு தமிழ்ப்பெண். நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் தான் எனது சொந்த ஊர். எனது தாய், ஆங்கிலோ இந்தியரான எனது தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பூனேவில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நடிக்க வந்துவிட்டேன். எனக்கு துணையாக எனது தாயார் உள்ளார் என்று கூறினார்.
தமிழ் பெண்ணாக இருந்து கொண்டு மது விருந்துக்கு அதுவும் தனியாகப் போகலாமா என்று கேட்டதற்கு,
நீங்கள் கேட்பது நியாயம் தான். ஆனால் என்ன செய்வது. சினிமாவில் இது எல்லாம் சகஜம். வெங்கட்பிரபு எனக்கு ஒரு படம் எடுத்துக் கொடுப்பதாக கூறியிருந்தார். அதனால் தான் அவருடைய அழைப்பை தட்டிக் கழிக்காமல் விருந்துக்கு சென்றேன். நான் சாப்பாடு மட்டும் தான் சாப்பிட்டேன். மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் அதை நிறுத்திவிட்டேன். எனக்கு 34 வயதாகிறது. நானும் ஒருவரை மணந்து, குழந்தை பெற்று வாழ ஆசைப்படுகிறேன். என் தாயார் எனக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார் என்றார்.
சரண் உங்களுக்கு எப்படி பழக்கம். அவர் உங்களை காதலித்தாரா என்றதற்கு,
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்கிற நல்ல மனிதருக்கு பிறந்த மோசமான மகன் தான் எஸ்.பி.பி. சரண். நாங்கள் ஒன்றும் காதலர்கள் அல்ல. சரண் ஏற்கனவே என்னிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போதே நான் அவரை எச்சரித்தேன்.
ஆமாம், வீடியோ கேசட்டில் என்ன உள்ளது. அந்த மதுவிருந்தில் எடுக்கப்பட்டதா என்றதற்கு,
அந்த வீடியோவில் நானும், சரணும் இருக்கிறோம். நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் உள்ள ஆதாரம் அது. அதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை.
எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன் என்று கூறியிருக்கிறீர்களே, ஏன்?
மன்னிப்பது தான் மனித மாண்பு. அவர் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டால் பிரச்சனையை இதோடு விட்டுவிடுவேன். வீடியோ கேசட்டை கொடுத்து நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கமிஷனரை வற்புறுத்துவேன். என்னை சந்தித்து பேச வேண்டும் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவரை நான் சந்திக்கவிருக்கிறேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனது மார்புகளை அழுத்திப்பிடித்து படுக்கைக்கு அழைத்தார் சரன் : சோனா பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
» பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு
» ஆளும்கட்சியினரால் எனக்கு ஆபத்து! விஜய் பரபரப்பு பேட்டி!!
» ரானாவாவது… காணாவாவது…! வடிவேலு பரபரப்பு பேட்டி!!
» என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum