தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படம் எடுத்து தமிழ் வளர்ப்பேன் - இயக்குன‌ரின் சூளுரை

Go down

படம் எடுத்து தமிழ் வளர்ப்பேன் - இயக்குன‌ரின் சூளுரை  Empty படம் எடுத்து தமிழ் வளர்ப்பேன் - இயக்குன‌ரின் சூளுரை

Post  ishwarya Thu Mar 07, 2013 11:58 am


ஓபனிங் எல்லாம் நல்லாயிருக்கு கதைதான் இங்கு நடப்பதெல்லாம். ஊரை ச‌ரி செய்ய‌‌ப் போறேன் என்று காக்கி போட்டவர்கள் ஒருகட்டத்தில் மாமூல் கலாச்சாரத்துக்கு அடிமையாவது போலதான் சினிமாவிலும். உலகப் படம் எடுக்கப் போறேன், கலாச்சாரத்தை காப்பாற்ற‌ப் போறேன் என்று வீராப்பாக கிளம்பி கமர்ஷியல் குட்டையில் ஊறிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். தமிழை காப்பாத்தப் போறேன் என்று புதிதாக ஒருவர் கிளம்பியிருக்கிறா‌ர். பெயர் ராஜ சூ‌ரியன்.

நேசம் நேசப்படும் படத்தை எடுத்திருக்கும் இவர் தன்னுடையதுதான் நிஜமான கிராமத்து காதல் என்கிறார். நிஜமாக நடந்த கதையா?

அப்படியொன்றும் இல்லை. இதில் வரும் காதலர்கள் கடைசிவரை தொட்டுக் கொள்ளவே மாட்டார்களாம் (ஹேய்... இதை நாங்க டி.ஆர். காலத்திலேயே பார்த்திட்டோமே). நாயகனுக்கு வேந்தர் என்றும் நாயகிக்கு அரசி என்று தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கிறாராம். அதேபோல் பிறமொழி கலக்காமல் தமிழில் மொத்தப் பாடல்களையும் எழுதியிருக்கிறாராம். வசனம் எப்படி என்று தெ‌ரியவில்லை. நாதா தே‌நீர் பருகுங்கள் என்று ஹீரோயின் சொன்னால்... ஓ காட்.

சினிமா மூலம் தமிழை வளர்க்கப் போறேன் என்று ராஜ சூ‌ரியன் படம் வெளிவரும் முன்பே சுட்டெ‌ரிக்க ஆரம்பித்திருக்கிறார். எதுக்கும் ராஜ சூ‌ரியனுக்கு ஒரு தமிழ் வணக்கம் போட்டு வைப்போம்.
நேசம் நேசப்படும், ராஜ சூரியன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum