தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்மக்குரலோன் – ஒரு சீக்ரெட் செய்தி

Go down

சிம்மக்குரலோன் – ஒரு சீக்ரெட் செய்தி Empty சிம்மக்குரலோன் – ஒரு சீக்ரெட் செய்தி

Post  ishwarya Mon Apr 01, 2013 2:42 pm

1987 ஆம் ஆண்டு சிவா‌ஜி கணேசன் தெலுங்கில் நடித்த ச‌ரித்திரப் படம் விசுவநாத நாயகுடு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது அனேகமாக தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். கர்ணன் படத்தின் கலெக்சனால் கவரப்பட்டு நடக்கும் டப்பிங் இது.

கிருஷ்ணதேவராயர் பரம்பரையில் வந்த விசுவநாத நாயகுடு மன்னனைப் பற்றிய இந்தக் கதையில் அம்மன்னனின் தந்தை நாகம்ம நாயக்கராக நமது சிம்மக் குரலோன் நடித்திருந்தார். இதே பெய‌ரில்தான் படம் தமிழுக்கு வரப்போகிறது. இந்த ச‌ரித்திரப் பின்னணியைவிட முக்கியமானது சிவா‌ஜி கணேசனின் வாய்ஸ். ச‌ரித்திரப் படங்களில் சிவா‌ஜியின் நடிப்பு பங்களிப்பு நாற்பது சதம் என்றால் குரல் பங்களிப்பு அறுபது சதம். அந்த சிம்மக் குரலை எப்படி தமிழில் கொண்டு வரப்போகிறார்கள்? மிமிக்‌ரி ஆர்ட்டிஸ்டை டப்பிங் பேச வைத்தால் எந்திரனில் ர‌ஜினிக்குப் பதில் சின்னி ஜெயந்த் நடித்தது போலிருக்கும். எப்படி இதை சமாளிக்கப் போகிறார்கள்?

இந்த இடத்தில் ஒரு ரகசியத்தை படத்தை வெளியிடப் போகும் குரு பிரம்மா ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது தெலுங்கில் இந்தப் படம் உருவான போதே அதனை தமிழில் வெளியிடுவதற்காக சிவா‌ஜி தனது சிம்மக் குரலில் தமிழ் டப்பிங் பேசியிருக்கிறார். ஏதோ காரணத்தால் அப்போது படத்தை தமிழில் வெளியிடவில்லை.

ஆக, புதுப்படமாக வெளியாகவிருக்கிறது நாகம்ம நாயக்கர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum