கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதல்: 4 பேர் சாவு
Page 1 of 1
கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதல்: 4 பேர் சாவு
திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 33). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று நானோ காரில் திருவொற்றியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் உறவினர் வீட்டில் இருந்து 8 மணிக்கு அதே நானோ காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
இரவு 9.30 மணியளவில் நீலங்கரையை அடுத்த கானத்தூர் மாயா ஜால் தியேட்டர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. அதில் புரசைவாக்கம் முருகப்பா தெருவை சேர்ந்த செல்வகுமார் (34) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் பயணம் செய்தனர்.
திடீரென்று 2 கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்கள் நொறுங்கின. இந்த விபத்தில் நானோ காரில் இருந்த தனசேகர், அவரது தாயார் மனோன்மணி (65), மாமியார் கலைச்செல்வி (56), மற்றொரு காரில் இருந்த செல்வகுமார் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தனசேகரின் மனைவி புவனேஸ்வரி (27), மகன் புவனேஷ் (7), உறவினர் புஷ்பலிங்கம் (37), செல்வக்குமாரின் நண்பர்கள் கிழக்கு முகப்பேரை சேர்ந்த தாமரைச்செல்வன் (33), திருவான்மியூரை சேர்ந்த கண்ணன் (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் பலியான செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலைப் பார்த்து வந்தார். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் கண்ணன், தாமரைச் செல்வன் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தான் விபத்தில் சிக்கி செல்வக்குமார் பலியாகி விட்டார்.
விபத்து நடந்த பகுதியில் சென்டர் மீடியேட் இல்லை. சாலையோரம் விளக்குகளும் இல்லை. இதுவே அடிக்கடி விபத்து ஏற்பட காரணமாகிறது என்று அந்த பகுதி மக்கள் கூறினார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் : நீரில் மூழ்கி 4 பேர் சாவு
» சிரியாவில் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதம் வீசியதில் 2 பேர் சாவு ராணுவம் மீது எதிர்க்கட்சிகள் புகார்
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு
» சிரியாவில் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதம் வீசியதில் 2 பேர் சாவு ராணுவம் மீது எதிர்க்கட்சிகள் புகார்
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum