கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
Page 1 of 1
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு அணுமின் நிலையத்தை அமைத்துள்ளது. தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் 163 எரிகோல்களில் 75 டன் யுரோனியம் எரிபொருள் நிரப்பப்பட்டு இறுதிக்கட்ட சோதனைகள் முடிந்து விட்டன.
2-வது அணுஉலை பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்களின் தொடர் போராட்டம் காரணமாகவும் முதலாவது அணுஉலையில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணங்களாலும் மின் உற்பத்தி காலதாமதமாகி கொண்டே வந்தது. இதையடுத்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்று ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் நடந்த 'பிரிக்ஸ்' நாடுகள் மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு நடத்தினார். அப்போது கூடங்குளம் அணுமின் நிலையம் ஏப்ரல் மாதம் செயல்படத் தொடங்கும் என்று புதினிடம் மன்மோகன்சிங் தெரிவித்தார். அத்துடன் கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதில் உள்நாட்டிலும் அனுமதி பெற வேண்டிய அவசியம் பற்றி புதினிடம் கூறியதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக இந்த சோதனை ஓட்டம் நடந்து வருவதாக அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். அணு உலை இயக்கத்தை நிறுத்தி வைப்பது மற்றும் மீண்டும் இயக்குவது தொடர்பான சோதனைகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். முதலில் குறைந்த அளவு மின் உற்பத்தி செய்யப்படும். பின்னர் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
மின் உற்பத்தி தொடங்கி 45 நாட்களில் முழு அளவான 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்பதை பிரதமர் அலுவலக தலைமை அதிகாரிகள் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். தமிழகத்தில் தற்போது கடுமையான மின்வெட்டு நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி
» பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்!
» அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்
» நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
» பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்!
» அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்
» நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum