நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
Page 1 of 1
நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
நீலகிரி மலைரெயிலுக்கு 3-வது புதிய ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் கல்லாறு வரை நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. மேட்டுப்பாளையத் திலிருந்து ஊட்டிக்கு மலைரெயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நீலகிரி மலை ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பராமரிப்பட்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை ரெயில்வே பணி மனையில் நீலகிரி மலை ரெயிலுக்கு ரூ. 4 கோடி செலவில் 3-வது புதிய என்ஜின் தயாரிக்கப்பட்டு கடந்த 22-ந் தேதி மேட்டுப்பாளையம் வந்தடைந்தது.
மேட்டுப்பாளையம் லோ- கோ ஷெட் பணிமனையில் கோச் பொறியாளர் ஆன்டோ பாபு, ஜூனியர் என்ஜீயர் அஸ்ரப் ஆகியோர் மேற்பார்வையில் புதிய ரெயில் என்ஜினில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னர் நேற்று (26-ந்தேதி) சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிய மலைரெயில் என்ஜினில் ஒரு பெட்டி இணைக்கப்பட்டது. சோதனை ஓட்ட ரெயில் பகல் 12.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது.
குன்னூர் லோ-கோ பொறியாளர் ஜெயச்சந்திரன், ரெயில் நிலைய அதிகாரி பிரசாந்த் மற்றும் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை பொறியாளர்கள் மேற்பார்வையில் சோதனை ஓட்ட ரெயில் இயக்கப்பட்டது.
சோதனை ஓட்டம் ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தைக் கடந்து சுமார் 2 கி.மீட்டர் தூரம் மலைப்பகுதியில் பல் சக்கரம் பொருத்தப்பட்ட ரெயில் பாதையில் சென்று பின்னர் மீண்டும் பகல் 2.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோதனை ஓட்டம் வெற்றி யடைந்ததை யொட்டி இந்த புதிய ரெயில் என்ஜின் வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டுச் செல்லும் மலைரெயிலில் இணைத்து இயக்கப்படும். பின்னர் மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் இயக்கப்படும் கோடை கால சிறப்பு ரெயிலில் இணைத்து இயக்கப்படும் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு கல்லாரில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊப்ளியில் இருந்து வந்த பெங்களூர் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடுவழியில் நிறுத்தி 2 மணிநேரம் சோதனை
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
» கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி
» வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய புதிய சுவாசச் சோதனை
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
» கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி
» வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய புதிய சுவாசச் சோதனை
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum